عن خولة بنت حكيم رضي الله عنها مرفوعًا: «مَن نزَل مَنْزِلًا فقال: أعوذ بكلمات الله التَّامَّات من شرِّ ما خلَق، لم يَضُرَّه شيءٌ حتى يَرْحَلَ مِن مَنْزِله ذلك».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அறிவிக்கிறார்கள் : "யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் தங்குவதற்காக இறங்கி பின்னர் "அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்" என்று கூறிப் பிரார்த்தித்தால், அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும்வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

பிரயாணம், சுற்றுலா போன்ற சந்தர்ப்பங்களில் ஓரிடத்தில் தங்க நேரிடும் போது மனிதனுக்கு இயல்பாக ஏற்படும் அச்சம், முன்னெச்சரிக்கை உணர்வு போன்றவற்றை நீக்கும் பயனுள்ள பாதுகாப்புத் தேடல் முறையை நபியவர்கள் தனது சமூகத்திற்கு வழிகாட்டுகின்றார்கள். அனைத்து குறைகளை விட்டும் தூய்மையான, (அனைவரையும் பாதுகாக்கப்) போதுமான, குணப்படுத்துபவனான அல்லாஹ்வின் வார்த்தை மூலம் தான் தங்கியிருக்கும் காலமெல்லாம் அவ்விடத்தில் தீங்கிழைக்கும் அனைத்தையும் விட்டு அபயத்தைத் தருமாறு பாதுகாப்புத் தேடுமாறு வழிகாட்டியுள்ளார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி சிங்கள மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான்
மொழிபெயர்ப்பைக் காண

நன்மைகள்

  1. பாதுகாப்புத் தேடுவதும் ஒரு வணக்கமாகும்.
  2. அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளைக் கொண்டமைந்த பாதுகாப்புத் தேடும் முறையே சட்டபூர்வமானதாகும்.
  3. அல்லாஹ்வின் வார்த்தைகள் படைக்கப்பட்டதன்று, ஏனெனில் அல்லாஹ் அதன் மூலம் பாதுகாப்புத் தேடுமாறு பணித்துள்ளான், படைப்பினங்கள் மூலம் பாதுகாப்புத் தேடுவது இணைவைப்பாகும், எனவே அவனது வார்த்தைகள் படைக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
  4. சுருக்கமனதாக இருந்தாலும் இந்த துஆ சிறப்புக்குரியதாகும்.
  5. படைப்பினங்களின் கட்டுப்பாடுகள் அல்லாஹ்வின் கரங்களிலாகும்.
  6. இந்த துஆவினால் கிடைக்கும் பரகத் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
  7. அல்குர்ஆனின் முழுமை மற்றும் பூரணத்துவம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு