عن أبي الهياج الأسدي قال: قال لي علي رضي الله عنه : «ألا أَبْعَثُك على ما بَعَثَني عليه رسول الله صلى الله عليه وسلم ؟ أن لا تَدْعَ صُورَةً إلا طَمَسْتَها، ولا قَبْرًا مُشْرِفًا إلا سَوَّيْتَه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!" என்று கூறினார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இணைவைப்பின் பால் இட்டுச் செல்லும் அனைத்து வாயில்களையும் அடைப்பதில் இஸ்லாம் அதிக அக்கறை கொண்டுள்ளது. அல்லாஹ்வின் படைப்பாற்றலுக்கு ஒப்பாவதாலும், அதனால் ஈர்க்கப்பட்டு, கண்ணியப்படுத்தி, சிலைவணக்கத்தின் பால் இட்டுச் செல்லும் என்பதாலும் தாம் காணும் அனைத்து உருவச் சிலைகளையும் அழிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அத்துடன் கப்ருகள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், மார்க்க வரையறையை மீறி உயர்த்தப்பட்ட கப்ருகள் போன்றவற்றால் அதில் அடங்கப்பட்டவர்களினால் ஈர்க்கப்பட்டு, வணக்கம், கண்ணியப்படுத்தல் போன்றவற்றில் அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கலாம் என்பதால் அவ்வாறான கப்ருகளையும் தகர்க்குமாறு அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்களிடத்தில் இஸ்லாம் நிலைத்திருக்கவும், அவர்களது கொள்கை தூய்மையாக இருக்கவுமே இவ்வாறு பணித்தார்கள். ஏனெனில் உருவச் சிலைகள் செய்வதும், கப்ருகள் மீது கட்டுவதும் அவற்றை கண்ணியப்படுத்தி, புனிதப்படுத்தி, தரத்திற்கு மேல் உயர்த்தி, அல்லாஹ்விற்கு செலுத்தும் கடமைகள் அவற்றுக்கும் செலுத்தும் நிலை ஏற்படுகின்றது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. உருவச் சிலைகள் செய்வது ஹராம் என்பதுடன் அனைத்து வித உருவச் சிலைகளையும் நீக்கி, அழித்துவிடுவது அவசியமாகும்.
  2. நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல், கல்வி போதித்தல் போன்றவற்றின் மூலம் சத்தியத்தில் பரஸ்பரம் உபதேசித்துக் கொள்ளல்.
  3. கப்ருகளை கட்டுமானம் போன்றவற்றால் உயர்த்துவது ஹராமாகும். ஏனெனில் அது இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும்.
  4. கப்ருகள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களைத் தகர்ப்பது அவசியமாகும்.
  5. கப்ருகள் மீது கட்டுவதைப் போன்றே உருவச் சிலைகள் செய்வதும் இணைவைப்பிற்கு இட்டுச் செல்கின்றது.
  6. கப்ருகள் மீது பெரிய அடையாளங்கள், வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட அடையாளங்கள் போன்றன இருப்பதும் மார்க்க வரையறையைத் தாண்டிய மேற்கண்ட தடையில் உள்ளடங்குகின்றது.
மேலதிக விபரங்களுக்கு