عن جندب بن عبد الله رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم قبل أن يموت بخمس، وهو يقول: «إني أبرأ إلى الله أن يكون لي منكم خليل، فإن الله قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا، ولو كنت متخذا من أمتي خليلا لاتخذت أبا بكر خليلا، ألا وإن من كان قبلكم كانوا يتخذون قبور أنبيائهم مساجد، ألا فلا تتخذوا القبور مساجد، فإني أنهاكم عن ذلك».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் "உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான். நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக்ர் அவர்களையே நான் என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்" என்று கூறுவதை நான் கேட்டேன்.
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபியவர்கள் தனது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் தனது சமூகத்திற்கு முக்கியமான ஒரு தகவலை அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்விடம் தனக்கிருக்கும் இடத்தைப் பற்றிக் கூறுகின்றார்கள், இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கிடைத்தது போன்று தனக்கும் நேசத்தின் அதியுயர் தரம் கிடைத்திருப்பதாகக் கூறுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வன்றி வேறுயாரும் தனக்கு உற்ற தோழனாக இல்லையென மறுத்தார்கள், ஏனெனில் அன்னாரது உள்ளம் இறை நேசத்தாலும், அவனது மகத்துவம், அறிவாலும் நிரம்பியுள்ளது, எனவே வேறு யாருக்கும் அதில் இடமேதுமில்லை. படைப்பினங்களின் இதயத்தில் உற்ற தோழமை ஒருவருக்கு மாத்திரம்தான் இருக்கும், அவ்வாறு படைப்பினங்களில் உற்ற தோழராக இருக்க முடியுமாக இருந்தால் அத்தகுதி அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு மாத்திரமே உண்டு. இது அபூ பக்ர் (ரலி) அவர்களின் சிறப்பையும், தனக்குப் பின்னால் கலீபாவாக அவர்கள்தான் வர வேண்டுமென்பதையும் சுட்டிக் காட்டுகின்றது. பின்னர், யூத, கிறிஸ்தவர்கள் தமது நபிமார்களின் சமாதிகளில் அளவுகடந்து சென்று, இணைவைப்பு வழிபாட்டுத் தளங்களாக அவற்றை மாற்றயது பற்றிக் குறிப்பிட்டார்கள். அவர்களது அச்செயலைப் போன்று செய்ய வேண்டாமென தனது சமூகத்தைத் தடுத்தார்கள். கிறிஸ்தவர்களுக்கு ஈஸா (அலை) அவர்கள் மாத்திரமே நபியாக இருந்தார்கள், இருப்பினும் அவர்களுக்கு பூமியில் சமாதி இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு நபிதான் இருந்தாலும் இரு சமூகத்தினரையும் இணைத்து பொதுவாகவே இங்கு "நபிமார்கள்" எனப் பன்மையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நபி ஈஸா (அலை) அவர்கள் உயர்த்தப் பட்டுவிட்டார்கள், அவர்கள் சிலுவையில் அறையப்படவோ, அடக்கம் செய்யப்படவோ இல்லை என்பதே உண்மையாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ்வின் கண்ணியத்திற்கேற்றவாறு நேசம் எனும் பண்பு அவனுக்குண்டு.
  2. முஹம்மத் (ஸல்), இப்ராஹீம் (அலை) ஆகிய அல்லாஹ்வின் இரு உற்ற தோழர்களின் சிறப்பு இங்கு கூறப்பட்டுள்ளது.
  3. அபூ பக்ர் (ரலி) அவர்களின் சிறப்பும், அவர்கள்தாம் பொதுவாக இச்சமூகத்தின் மிகச் சிறந்தவர் என்பதும் இந்நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  4. இந்நபிமொழி அபூ பக்ர் (ரலி) அவர்களின் கிலாபத்திற்கு ஓர் ஆதாரமாகும்.
  5. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உற்ற தோழர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
  6. சமாதிகள் மீது பள்ளிகள் கட்டுவது முன்னைய சமுதாயங்களின் வழிமுறையாகும்.
  7. இணைவைப்பில் வீழ்வதை விட்டும் எச்சரிப்பதற்காக , தொழுகை நடத்தப்படும், அல்லது அவற்றை முன்னோக்கித் தொழப்படும் வணக்கஸ்தளங்களாக சமாதிகளை எடுத்து, அவற்றின் மீது பள்ளிகளோ, வான்மோடுகளோ கட்டப்படுவதைத் தடுக்கின்றது.
  8. இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும் வழிகளை அடைத்தல்.
மேலதிக விபரங்களுக்கு