ஹதீஸ் அட்டவணை

தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்!'' எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி(ஸல்) அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
(வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்): நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால்,அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
"உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான். நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக்ர் அவர்களையே நான் என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
"கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) உயர்த்தியதைப் போன்று என்னை நீங்கள் உயர்த்திட வேண்டாம், நான் ஓர் அடியானே, எனவே அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றே கூறுங்கள்".
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
மக்களில் உமது பரிந்துரைக்கு மிகத் தகுதியானவர் யார்? "உளத்தூய்மையுடன் லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறியவர்" என்றார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் 'முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் 'ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ('ஆகுக!' என்னும்) ஒரு வார்ததை(யால் பிறந்தவர்)' என்றும், 'அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம், நரகம் (இருப்பது) உண்மை தான்' என்றும், (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
"எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்" என்று மூன்று முறை கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ் (ஒருவர் செய்யும்) நல்ல செயல்களையும், தீய செயல்களையும் எழுதிக் கொள்கிறான். அதற்கு மேல் அவன் அதனை விளக்கியும் இருக்கிறான். ஒருவர் நல்ல செயலை செய்ய நினைத்து அதை செய்து முடிக்க முடியாவிட்டாலும் அல்லாஹ் அதை ஒரு முழுமையான நல்ல செயலாக எழுதிக் கொள்கின்றான். ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்ய நினைத்து, அதைச் செய்தும் முடிப்பாரேயானால் அல்லாஹ் அதை பத்து முதல் எழுநூறு தடவை அல்லது அதற்கும் பன்மடங்கு அதிகமானதாக குறித்துக் கொள்கிறான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நிச்சயமாக அல்லாஹ் உங்களது உடலையோ, தோற்றத்தையோ பார்ப்பதில்லை, இருப்பினும் உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
எனது அடியார்களே, மக்களுக்கு அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர். எனது அடியார்களே, நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள். எனவே, என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான் நேர்வழி காட்டுவேன்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
பாவங்களிலேயே மிகப் பெரியது எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்கும் போது அவனுக்கு நீ நிகர் உண்டாக்குவதாகும் என பதிலளித்தார்கள்".
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நிச்சயமாக அல்லாஹ் அநியாக்காரனை தண்டிப்பதில் அவகாசம் வழங்குகிறான்.அவனை தண்டித்தால் அவனை விடவும் மாட்டான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
பெரும்பாவங்கள் : அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், அவனது உபாயத்திலிருந்து அச்சமற்றிருத்தல், அவனது அருளிலிந்து நிராசையடைதல், அவனது ரஹ்மத்திலிருந்து நம்பிக்கையிழத்தல் என்பனவாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, ''எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகிற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்'' என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
பாதுகாப்பிற்காக யார் ஒரு பொருளைத் தொங்க விடுகிறாரோ அதன் பக்கமே அவர் சாட்டப்பட்டு விடுவார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும், உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
இரக்கமுள்ளவர்களுக்கு ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஒட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்ல விட மாட்டான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நீங்கள் கப்ருகளை முன்னோக்கித் தொழ வேண்டாம், அவற்றின் மீது உட்காரவும் வேண்டாம்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அவர்களில் நல்லடியான் அல்லது நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
"எனது அடியான் என்னைப் பற்றி எண்ணுகின்ற பிரகாரம் நான் இருப்பேன்.எனவே அவன் எங்கு என்னை நினைவு படுத்துகின்றானோ அங்கு அவனுடன் நான் இருப்பேன்"என்று அல்லாஹ் கூறினான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உலகில் ஒரு அடியான் இன்னொரு அடியானின் தவறை மறைத்து விடுவானாகில் மறுமையில் அவனுடைய தவறை அல்லாஹ் மறைக்காமல் இருக்கமாட்டான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ் ஒரு சமூகத்தின் மீது அருள் புரிய நாடினால் அதன் அழிவுக்கு முன் அதன் நபியைக் கைப்பற்றி விடுவான்.பின்னர் அவரை.அந்த சமூகத்தினருக்கு சிபாரிசு செய்கின்றவராக ஆக்குவான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உங்களிடம் இருக்கின்றன.அவை விவேகமும்,நிதானமுமாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது