عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي الخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ».
[قال النووي: حديث حسن] - [رواه ابن ماجه والبيهقي وغيرهما] - [الأربعون النووية: 39]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் :
'நிச்சயமாக அல்லாஹ் என் சமூகத்தாரிடத்தில்; தவறுதலாக ஏற்படக் கூடியதையும் மறதியாக ஏற்படக்கூடியதையும் இன்னும் நிர்பந்தமாக நிகழக்கூடிவற்றையும் எனக்காக மன்னித்து விடுகிறான்'.
[قال النووي: حديث حسن] - [رواه ابن ماجه والبيهقي وغيرهما] - [الأربعون النووية - 39]
அல்லாஹ் தனது சமூகத்திற்கு பின்வரும் மூன்று நிலைகளில் மன்னிப்பை வழங்குகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் : முதாலாவது : தவறுதலாக நிகழ்ந்த செயல். அதாவது மனமுரண்டாக அல்லாது தவறுதலாக வெளிப்பட்ட ஒருவிடயம். உதாரணத்திற்கு ஒருவர் ஏதாவது ஒருவிடயத்தை செய்ய விரும்புகிறார். அவ்வேளை அவர் செய்ய விரும்பாத ஒரு செயல் நிகழ்ந்து விடுகிறது. இவ்வாறான தவறை அல்லாஹ் மன்னிக்கிறான். இரண்டாவது : மறதி : அதாவது சுயநினைவுடன் ஒன்றை செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவர் அதனை செய்யும் போது மறந்து விடுகிறார் இதற்கும் எவ்விதப்பாவமுமில்லை. மூன்றாவது: நிர்ப்பந்தம் : தடுப்பதற்கு சக்திபெறாத நிலையில் ஒரு பாவமான விடயத்தை செய்யுமாறு ஒருவர் நிர்ப்பந்திக்கப்படுகிறார். இவ்வாறான நிலையில் அவரின் மீது எவ்விதப்ப பாவமும் கிடையாது. இந்த ஹதீஸின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை தடைசெய்யப்பட்ட ஒரு விடயத்தில் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கிடையிலான தொடர்பை குறிப்பிடுகிறது. ஒரு நபர் கட்டளையிடப்பட்ட ஒன்றைச் செய்ய மறந்து விட்டால், அந்தக் கட்டளையிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படமாட்டாது. இருப்பினும், அவ்வாறு மறதியாக செய்ததன் விளைவாக ஒரு குற்றம் நிகழ்ந்தால், மனிதர்களுடன் தொடர்ப்பான உரிமையா இருப்பின் அவ்வுரிமையிலிருந்து விலக்கு அளிக்கப் படமாட்டாது. அதாவது ஒருவர் தவறுதலாகக் கொல்லப்பட்டால், அவர் 'தியா' கொலைக்கான இழப்பீடு செலுத்த வேண்டும், அல்லது தவறுதலாக ஒரு காரை சேதப்படுத்தினால், அவர் இழப்பீடு செலுத்த வேண்டும்.