عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلاَةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّ الإِسْلاَمِ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 25]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் :
'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுக்கும் (நிலை ஏற்படும்)வரை மக்களுடன் போர் புரியும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். யார் இவற்றை செய்கிறாரோ அவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொள்வார்; நியாயமான காரணம் இருந்தால் தவிர. அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 25]
எந்த இணையும் இல்லாத உண்மையான இறைவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே எனவும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹவிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தை உண்மைப்பாடுத்தி சாட்சி கூறும் வரையில் இணைவைப்பாளர்களுடன் போராடுமாறு தனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். அத்துடன் அந்த சான்று பகர்தலின் அடிப்படையில் தினமும் ஐவேளைத் தொழுகைகளை நிலைநாட்டுதல், தகுதியானோருக்கு கடமையான ஸகாத்தை வழங்குதல் போன்ற விடயங்களை செய்யுமாறு குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்தால் இஸ்லாம் அவர்களின் உயிருக்கும் உடமைகக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குகிறது. ஆகவே அவர்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கேட்ப கொலை செய்யப்டுவதற்குரிய குற்றங்களை செய்தாலே தவிர அவர்களை கொல்வது அனுமதிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர்களின் இரகசியவிவகாரங்கள் குறித்த விசாரணையை அல்லாஹ் பொறுப்பேற்பான்.