عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الجَاهِلِيَّةِ؟ قَالَ: «مَنْ أَحْسَنَ فِي الإِسْلاَمِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الجَاهِلِيَّةِ، وَمَنْ أَسَاءَ فِي الإِسْلاَمِ أُخِذَ بِالأَوَّلِ وَالآخِرِ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள் : "இறைத்தூதர் அவர்களே! 'நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்தவற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப் படுவோமா?' என ஒருவர் கேட்டதற்கு, "இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப் படமாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
அறியாமைக்காலத்தில் தாம் செய்த தவறுகள், பாவங்களைப் பற்றி, அதன் மூலம் தாம் குற்றம் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவோமா என ஒரு நபர் நபி (ஸல்) அவர்களிடம் வினவினார். இஸ்லாத்தில் தொடர்ந்து நிலைத்திருந்து, பாவங்களை விடுவதன் மூலம் முறையாக இருந்தால் அறியாமைக் காலத்தில் செய்த பாவங்களுக்காக விசாரிக்கப்பட மாட்டார். அது கொலை, விபச்சாரம் போன்ற பெரிய பாவங்களாக இருந்தாலும், அல்லது சிறு பாவங்களாக இருந்தாலும் சரியே. இஸ்லாத்திற்கு வந்த பின் மீண்டும் மதம் மாறுவதன் மூலம் தீமை செய்தால் அவர் முன்னர் செய்த பாவம், இஸ்லாத்தில் செய்தபாவம் அனைத்தையும் விசாரிக்கப்படுவார் என நபியவர்கள் விளக்கினார்கள். இந்நபிமொழியின் சரியான விளக்கம் இதுவே. மோசமாக நடப்பதன் மூலம் இஸ்லாத்தில் மதமாற்றமின்றி பாவம் செய்வதுதான் இதன் கருத்தென்றால் "இஸ்லாம் அதற்கு முன்னுள்ள பாவங்களை அழித்து விடுகின்றது" என்ற ஒட்டுமொத்த அறிர்களின் ஒருமித்த கருத்திற்கு இது முரண்படுகின்றது. அந்த செய்தி ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : "நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்: இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்புபோலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேறி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)". (அன்பால் : 38). அது எவ்வாறு நிகழுமெனின் : ஏற்கனே குப்ரிலே செய்த காரியங்களை வைத்து பழிவாங்கப்பட்டு, கண்டிக்கப்படுவான், நீ காபிராக இருக்கும் போது இன்ன இன்ன பாவங்களை எல்லாம் செய்தாயே?, உனது இஸ்லாம் மீண்டும் இவற்றை செய்ய வேண்டாமென தடுக்கவில்லையா? எனக் கேட்கப்பட்டு, பின் இஸ்லாத்தில் செய்த குற்றங்களுக்கா தண்டிக்கப்படுவான். இஸ்லாத்தில் தீமை செய்வதென்றால் முறையாக இஸ்லாத்தை ஏற்காமலிருத்தல், அல்லது நயவஞ்சகனாக, தூய்மையான ஈமானற்றவனாக இருத்தல் என்ற கருத்தும் உள்ளது. இருப்பினும் ஏற்கனவே கூறப்பட்ட முதல் கருத்தே சரியானதாகும்.