உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்லது 'அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'உங்களில் எவர் ஒரு தீங்கைக் காண்கிறாரோ அவர் அதைத் தனது கரத்தால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால் அதை அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர் தனது மனதால் வெறுக்கட்டும். இதுதான் நம்பிக்கையின் (ஈமானின்) மிகவும் பலவீனமான- தாழ்ந்த- நிலையாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூறினார்கள்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை' என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஆடை கிழிந்து இத்துப்போவதை போன்று உங்கள் உள்ளத்தில் உள்ள ஈமானும் குறைந்து பலவீனமடைந்து விடுகிறது. எனவே உங்களின் ஈமானை புதுப்பிக்குமாறு அல்லாஹ்விடம் கேளுங்கள்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது