عن أبي عبد الله جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما أن رجلاً سأل رسول الله صلى الله عليه وسلم فقال: أرأيت إذا صليت المكتوبات، وصمت رمضان، وأحللت الحلال، وحرمت الحرام، ولم أزد على ذلك شيئاً، أأدخل الجنة؟ قال: «نعم».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

அபூ அப்தில்லாஹ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள் : "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். "c2">“நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றுகின்றேன், ரமழானில் நோன்பு நோற்கின்றேன், ஹலாலை ஹலாலாக்கி, ஹராத்தை ஹராமாக்குகின்றேன். இதற்குமேல் நான் எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேனா? என்று எனக்குக் கூறுங்கள்”. நபியவர்கள் "c2">“ஆம்!” என்று பதில் தந்தார்கள்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அபூ அப்தில்லாஹ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள் : "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். "c2">“நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றுகின்றேன்". அதாவது ஸுன்னத்தான தொழுகைகளின்றி ஐவேளைத் தொழுகைகளை மாத்திரம் நிறைவேற்றுகின்றேன், ஸுன்னத்தான நோன்புகளின்றி ரமழானில் மாத்திரம் நோற்கின்றேன். “ஹலாலை ஹலாலாக்குதல்” என்றால் அது ஹலால் என நம்பிக்கை கொள்வதுடன், அதனை பயன்படுத்துதலாகும். "c2">“ஹராத்தை ஹராமாக்குதல்” என்றால் அது ஹராம் என நம்பிக்கை கொள்வதுடன் தவிர்ந்து கொள்ளல், அனுமதிக்கப்பட்டவற்றுடன் போதுமாக்கிக் கொள்ளல். இதற்குமேல் நான் எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேனா?, நபியவர்கள் "c2">“ஆம்!” என்று பதில் தந்தார்கள். ஏனெனில் இறையச்சம் என்பது கடமையைச் செய்வதுடன், தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்ளலாகும். இது போன்றவர்கள்தான் இறைவசனத்தில் நடுநிலையாக நடந்து கொண்டவர்கள் என அறியப்பட்டோராகும். இவர்கள்தான் அல்லாஹ் கடமையாக்கியதைத் தவிர வேறெதனையும் அதிகரிக்காதவர்கள், அவன் ஹராமாக்கியதைத் தவிர வேறெதனையும் தவிர்ந்து கொள்ளாதவர்களாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. சத்தியம், நேர்வழியை அறிந்து, அதில் தொடர்ந்திருப்பதில் நபித்தோழர்களின் ஆர்வம், சுவனத்திற்கு இட்டுச் செல்பவை, சுவனவாதிகளை சுவனத்தில் அடையவ வைக்கும் இடம் போன்றவற்றை அறியும் ஆர்வம் போன்றன இந்நபிமொழியில் தென்படுகின்றது.
  2. சுவனமே இறுதி இலக்கு என்பதை இந்நபிமொழி அறிவிக்கின்றது. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று அவனது சுவனத்தில் குடியிருப்பதற்காகவே மனிதன் நற்செயல்களை செய்கின்றான்.
  3. நற்செயல்களும் சுவனம் நுழைவதற்கான காரணிகளில் உள்ளதென்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது.
  4. ஐவேளைத் தொழுகைகளின் மகத்துவம், இரு சாட்சியங்களுக்கு அடுத்து இதுவே மிக முக்கியமான, மகத்தான அமல் என்பதற்கு இந்நபிமொழி சான்றாக உள்ளது.
  5. ரமழானில் நோன்பு நோற்பதன் மகத்துவம் இங்கு உணரப்படுகின்றது. கேள்வி கேட்டவர் அதனைக் கேட்கும் போது ஒன்றோ மார்க்க சட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டு இருக்க மாட்டாது. அல்லது அவரிடம் ஸகாத் கொடுக்குமளவு செல்வம் இருந்திருக்க மாட்டாது.
  6. ஹலாலை ஹலாலாக்கி, ஹராத்தை ஹராமாக்குவதில் ஒரு மனிதன் அல்லாஹ், ரஸூலிடமிருந்து வந்தவற்றுக்கு உடன்பட்டு, அதனைப் பின்பற்றக் கூடியவனாகவே இருக்க வேண்டும். அல்லாஹ் ஹலாலாக்கியவற்றில் முடியுமானவற்றை செய்ய வேண்டும். அவன் ஹராமாக்கியவற்றை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். அது ஹராம் என்பதை உறுதி கொள்வதுடன் அனைத்து ஹராத்தையும் விட்டுத் தூரமாகுவது இதில் அடங்கும்.
மேலதிக விபரங்களுக்கு