உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறிவார்களானால் (முழங்கால்களில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு விறகுக் கட்டைகள் சகிதமாக என்னுடன் மக்களில் சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து அவன் உங்களிடம் விசாரணை செய்(யும் நிலையை நீங்கள் ஏற்படுத்)திட வேண்டாம்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
கடமைகளுடன் மாத்திரம் நின்று கொள்ளல்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழி
சுத்தம் ஈமானின் பாதியாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழி
நீங்கள் அதிகமாக ஸுஜூத் செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செய்யும் ஒவ்வொரு ஸுஜூதின் மூலமும் அல்லாஹ் உங்களின் ஒரு அந்தஸ்தைக் கூட்டாமலும்,அதன் மூலம் உங்களின் ஒரு தவறை அழித்து விடாமலும் இருப்பதில்லை.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு