عن سالم بن أبي الجَعْدِ قال: قال رجل: ليتني صَلَّيتُ فاسترحْتُ، فكأنّهم عابُوا ذلك عليه، فقال: سمعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقول:
«يا بلالُ، أقِمِ الصَّلاةَ، أرِحْنا بها».
[صحيح] - [رواه أبو داود] - [سنن أبي داود: 4985]
المزيــد ...
ஸாலிம் இப்னு அபுல் ஜஃத் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் நான் தொழுது ஓய்வு பெற்றால் சிறப்பாயிருக்குமே! என்று கூற அங்கிருந்தவர்கள் இதனை குறையாகப் பார்த்தார்கள் இதற்கு அவர், தான் அல்லாஹ்வின் தூதர் கூறுவதை செவிமடுத்துள்ளேன்.
பிலாலே தொழுகைகாக இகாமத் கூறுவீராக! அதன் மூலம் எமக்கு ஆறுதல் அளிப்பீராக என்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்] - [سنن أبي داود - 4985]
நபித் தோழர்களில் ஒருவர் 'நான் தொழுது ஓய்வு பெற்றால் சிறப்பாயிருக்கமே' என்று கூற, அதற்கு அவரை சூழ உள்ளோர் குறைபட்டுக் கொண்டார்கள். அதற்கு அவர், தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை செவிமடுத்தேன் அவர்கள்: நாம் ஆறுதல் பெறுவதற்காக பிலாலே தொழுகைக்கான அதானைக் கூறி இகாமத்தும் கூறுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுடன் உரையாடுவது, ஆன்மாவுமக்கு உள்ளத்திற்குமான நிம்மதி அதிலுள்ளது.