عن بريدة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«إِنَّ الْعَهْدَ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ».

[صحيح] - [رواه الترمذي والنسائي وابن ماجه وأحمد] - [سنن النسائي: 463]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
எமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) இடையில் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்'

[சரியானது] - [இமாம்களான திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது] - [ஸுனன் அந்நஸாஈ - 463]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கும் அவர்கள் அல்லாத காபிர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் ஆகியோருக்கிடையிலான ஒப்பந்தமும், உடன்படிக்கையும் தொழுகையாகும். யார் அதனை விட்டுவிடுகிறாரோ அவர் காபிராகிவிட்டார், என இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தொழுகையின் தனித்துவமும் அந்தஸ்த்தும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு முஃமினுக்கும் காபிருக்குமிடையிலான பிரிகோடாகவும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளமை.
  2. இஸ்லாமிய சட்டங்கள் ஒரு மனிதனின் மறைவான விடயங்களுக்கு அப்பால் வெளிப்படையான விடயங்களைக் கொண்டே நிரூபிக்கப்படும்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (57)
மேலதிக விபரங்களுக்கு