عن عمران بن حصين رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«لَيْسَ مِنَّا مَنْ تَطَيَّرَ أَوْ تُطُيِّرَ لَهُ، أَوْ تَكَهَّنَ أَوْ تُكُهِّنَ لَهُ، أَوْ سَحَرَ أَوْ سُحِرَ لَهُ، وَمَنْ عَقَدَ عُقْدَةً، وَمَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ».
[حسن] - [رواه البزار] - [مسند البزار: 3578]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
' பறவைச் சகுனம் பார்ப்பவனும், சகுனம் பார்க்கப் பட்டவனும், ஜோசியம் பார்த்தவனும், ஜோசியம் பார்த்துவிடப் பட்டவனும், சூனியம் செய்தவனும், சூனியம் செய்யுமாறு பணித்தவனும் எம்மைச் சார்ந்தவனல்ல, யார் ஒரு ஜோசியனிடம் சென்று அவன் கூறுவதை உண்மைப் படுத்துகின்றானோ அவன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை மறுத்தவனாவான்'.
[ஹஸனானது-சிறந்தது] - [இதனை அல் பஸ்ஸார் அறிவித்திருக்காறார்] - [مسند البزار - 3578]
'எம்மை சார்ந்ததோர் அல்லர்' என்ற வார்த்தையின் மூலம் நபியவர்களின் சமூகத்தில் உள்ளோர் செய்யும் சில செயற்பாடுகளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அவற்றுள் சில பின்வருமாறு :
முதலாவது அம்சம் : 'பறவைச் சகுனம் பார்ப்பவனும் சகுனம் பார்க்கப்பட்டவனும்' இதன் அடிப்படை பயணம் அல்லது வியாபாரம் அல்லது இது போன்ற ஏதாவது ஒரு செயலை துவங்கும் போது ஒரு பறவையை பறக்க விடுவதாகும். அந்தப் பறவையானது வலப்பக்கமாக பறந்து சென்றால் நற்சகுனம் என்று பொருள். எனவே அவர் நாடிய விடயத்தை மேற்கொள்வார். குறித்த பறவையானது இடது பக்கமாக பறந்து சென்றால் அதனை துற் சகுணமாகக் கருதி செய்ய நாடிய காரியத்தை தவிர்த்துக்கொள்வார்.இந்த அடிப்படையில் குறித்த காரியத்தை தான் செய்வதோ பிறருக்கு பொறுப்புச்சாட்டுவதோ கூடாது. அத்துடன் பறவைகள், விலங்குகள், குறைபாடுகள் உள்ளவர்கள், எண்கள், நாட்கள், அல்லது கேட்கக் கூடியதாகவோ அல்லது காணக் கூடியதாகவோ எவை இருந்தாலும், அவை அனைத்தும் துற்சகுணத்தில் அடங்கிவிடும்.
இரண்டாவது அம்சம்: 'ஜோசியம் (சாஸ்திரம் பார்பவனும், ஜோசியம் பார்த்து விடப் பட்டவனும்,' அதாவது யார் நட்சத்திரங்களையும் அது போன்றவற்றையும் பயன் படுத்தி, தனக்கு மறைவான ஞானம் உள்ளதாக வாதிடுகிறானோ, அல்லது மறைவான அறிவு தன்னிடம் இருப்பதாக வாதிடும் சாஸ்திரக்காரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மையென ஏற்றுக் கொள்கிறானோ அவன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்டதை மறுத்தவனாவான்.
மூன்றாவது அம்சம்: 'சூனியம் செய்பவனும் செய்யுமாறு பணித்தவனும். இது, பிறருக்கு நன்மை செய்ய நாடியோ அல்லது தீங்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலோ யார் தானாகவே சூனியத்தை செய்கிறரோ அல்லது இன்னொருவரிடம் பொறுப்புச்சாட்டி செய்யுமாறு வேண்டுகிறாரோ அல்லது தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு கோரும் வாசகங்களை ஓதி அதில் ஊதி நூல்களில் முடிச்சிட்டு சூனியம் செய்கிறாரோ அவர்கள் அனைவரையுமே இந்த சொற் பிரயோகம் குறிக்கிறது.