عن عائشة رضي الله عنها ، قالت: سَأَل رسول الله صلى الله عليه وسلم أُنَاسٌ عن الكُهَّان، فقال: «ليْسُوا بشيء» فقالوا: يا رسول الله إنهم يُحَدِّثُونَا أحْيَانَا بشيء، فيكون حَقَّا؟ فقال رسول الله صلى الله عليه وسلم : «تلك الكلمة من الحَقِّ يخْطفُها الجِنِّي فَيَقُرُّهَا في أُذُنِ وليِّه، فَيَخْلِطُونَ معها مائة كَذِبَة». وفي رواية للبخاري عن عائشة رضي الله عنها : أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «إن الملائكة تَنْزِل في العَنَانِ -وهو السَّحَاب- فَتَذْكُرُ الأمر قُضِيَ في السماء، فَيَسْتَرِقُ الشيطان السَّمْعَ، فيسمعه، فيُوحِيَه إلى الكُهَّان، فيكذبون معها مائة كَذْبَة من عند أَنْفُسِهم».
[صحيح] - [الرواية الأولى: متفق عليها. الرواية الثانية: رواها البخاري]
المزيــد ...

நபி (ஸல்) அவர்களிடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ''சோதிடர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருளே அல்ல'' என்று பதிலளித்தார்கள். அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)' என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒட்டுக் கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்'' என்று கூறினார்கள். புஹாரியின் மற்றுமொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக ஆஇஷா (ரலி) பின்வருமாறு அறிவிக்கின்றார்கள் : "வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஒட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் : எதிர்கால மறைவான விடயங்களைப் பற்றி அறிவிக்கும் சோதிடர்களைப் பற்றி சிலர் நபியவர்களிடம் வினவ, அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம், அவர்களது பேச்சுக்களை எடுக்கவும் வேண்டாம், அவர்கள் ஒரு பொருட்டே அல்ல எனக் கூறினார்கள். அப்போது சிலர் அவர்கள் கூறுவது யதார்த்தத்திற்கு உடன்படுகின்றதே, இன்ன மாதத்தில், இன்ன தினத்தில் நடைபெறும் என மறைவான ஒன்றை அவர்கள் அறிவித்தால் அவர்களது கூற்றுப் பிரகாரமே நடக்கின்றதே எனக் கேட்டனர். வானத்தில் பேசப்படும் செய்திகளை ஒட்டுக்கேட்டு, தமது சோதிட நேசர்களிடம் இறங்கி தாம் கேட்டவற்றைக் கூறி விடுகின்றனர், பின் அந்த சேதிடன் தான் கேட்டவற்றில் மேலும் நூறு பொய்களைக் கலந்து விடுகின்றான் என நபியவர்கள் விளக்கமளித்தார்கள். புஹாரியின் அடுத்த அறிவிப்பின் அர்த்தம் : மலக்குகள் உலக மக்கள் விடயத்தில் அல்லாஹ் தினமும் தீர்ப்புச் செய்யும் விடயங்களை செவிமடுத்து, பின் மேகத்திற்கு இறங்கி தமக்கிடையே பேசிக் கொள்கின்றனர். ஷைத்தான் அவற்றை ஒட்டுக்கேட்டு, தனது சோதிடத் தோழர்களிடம் இறங்கி, தான் கேட்டவற்றை அறிவிக்கின்றான். பின் சோதிடன் தான் கேட்டவற்றில் மேலும் நூறுக்கும் மேற்பட்ட பொய்களைக் கலந்து விடுகின்றான்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. சோதிடர்களை நம்புவது தடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறுவது சில வேளை உண்மையானாலும் பெரும்பாலும் இட்டுக்கட்டி, பொய்யே கூறுகின்றனர்.
  2. சோதிடர்களின் கூற்றுக்களில் உண்மையாவது ஜின்கள் ஒட்டுக் கேட்டவைதான். நபி (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட முன் இவர்கள் கீழ்வானுக்கு அடியில் வானுலகில் நடப்பதை செவியுற உட்கார்ந்திருப்பார்கள். நபியவர்கள் அனுப்பப்பட்டதும் அதிலிருந்து தடுக்கப்பட்டார்கள். எனவே திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்க முற்படும் போது தீப்பந்தத்தால் வீசி எறியப்படுவார்கள். இதனைக் குர்ஆனும் அறிவித்துள்ளது.
  3. ஜின்கள் மனிதர்களில் தமது நேசர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.
  4. ஷைத்தான்கள் திருட்டுத் தனமாக ஒட்டுக்கேட்பது தொடர்ந்தும் உள்ளது, இருப்பினும் அறியாமைக் காலத்துடன் ஒப்பிடும் போது வெகுவாகக் குறைந்து, அரிதாகி விட்டது என்றே கூற வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு