عن عمر رضي الله عنه قال: نُهِيَنا عن التَّكَلُّف.
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : "வருத்திக்கொண்டு காரியங்களை மேற்கொள்வதை விட்டும் நாம் தடுக்கப்பட்டோம்".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

உமர் (ரலி) அவர்கள் வருத்திக்கொண்டு காரியங்களை மேற்கொள்வதை விட்டும் தடுக்கப்பட்டார்கள்.என்ற செய்தியைக் குறிப்பிடுகிறார்கள். இங்கே தடுத்தவர் நபி (ஸல்) அவர்கள் ஆவார். இந்த ஹதீஸில் வந்துள்ள 'நுஹீனா என்ற வார்த்தையை ஸஹாபி குறிப்பிட்டிருப்பினும் அவ்வார்த்தையானது நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவே கொள்ளல் வேண்டும். 'அத்தகல்லுப்' என்பது குறித்த விடயத்துடன் எவ்விதத் தொடர்புமற்ற சொல் அல்லது செயல் சார் விடயங்களை வருத்திக்கொண்டு சிரமத்துடன் பிறர் முன்னிலையில் வெளிப்படுத்த முனைவதைக் குறிக்கும். இதற்கான சிறந்த உதாரணம் இந்தத் தலைப்பில் வந்துள்ள ஹதீஸாகும். இவற்றில் சொல் சார்ந்த விடயத்திற்கு உதாரணம் : அளவுக்கதிகமான கேள்விகள், ஷரீஅத்தில் வெளிப்படையாக விளங்கி பின்பற்ற முடியுமான விடயங்களில் மறைந்திருக்கும் மூடலான விடயங்களை ஆராய்ந்து கூறுதல் போன்றனவாகும். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அவர்அணிந்திருந்த மேற்சட்டையின் பிற்பகுதியில் நான்கு ஒட்டுக்கள் இருந்தன. அவர் 'وَفَاكِهَةً وَأَبًّا' என்ற வசனத்தை ஒதிக்காட்டி, இதில் வந்துள்ள ''பாகிஹா" கணிகளை நாம் அறிவோம், "அப்பா" என்ற சொல்லுக்கான உண்மை அர்த்தம் என்பது குறித்து அறியமாட்டோம் என கூறிவிட்டு "நாம் வருத்திக் கொண்டு செயலாற்றுவதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்" என்ற ஹதீஸை குறிப்பிட்டார்கள். செயல் சார்ந்தது என்பற்கு உதாரணம் : ஒரு விருந்தாளி வருகிறார் அவரை மிகச் சிரமத்தோடு தன்னை வருத்திக்கொண்டு தனது இயலுமைக்கும் வசதிக்கும் அப்பால் நின்று ஒருவர் அவருக்காக செலவு செய்து கவனிக்கிறார், இவ்வாறு செய்வது இவர் சில வேலை பிறரிடம் கடன் பெற்று அதனை நிறைவேற்றுவதற்கு கூட அவருக்கு முடியாது போகலாம். இந்த வகையில் இவர் இவ்வுலகிலும் மறுமையிலும் தனக்கு கொடுமையையும், இன்னலையும் ஏற்படுத்திக் கொண்டவராவார். எனவே ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை தன்னை வருத்திக்கொள்ளாது நபியவர்கள் போன்று எல்லா விடயங்களிலும் நடுநிலையை கடைப்பிடித்து ஒழுகுவது அவசியமாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தன்னை வருத்திக் கொண்டு சிரமப்படுவதைத் தடுப்பதுடன் அனைத்து விடயங்களிலும் அதனை விட்டும் தூரமாகி இருப்பதை ஊக்குவித்தல்.
மேலதிக விபரங்களுக்கு