உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

பாவங்களில் பெரியதை உமக்கு அறிவிக்கட்டுமா?
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
'அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஊகங்களை உங்களுக்கு எச்சரிக்கின்றேன். ஏனெனில் ஊகங்கள்தான் பேச்சிலே மிகப் பொய்யானதாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அதிகமாக சாபமிடுவோர் நிச்சயமாக மறுமை நாளில் சிபாரிசு செய்கின்றவர்களாகவும், சாட்சி கூறுகின்றவர்களாவும் இருக்க மாட்டார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நீ முஸ்லிம்களின் குறைகளை துருவி ஆராய்ந்தால் அவர்களை நீ நாசமாக்கிவிட்டாய், அல்லது நாசமாக்கிட முயற்சித்தவராவாய்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நிச்சயமாக ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து விட்டான். ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவை ஏற்படுத்துவதில் நம்பிக்கை வைத்துவிட்டான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
மனிதன் தன் தந்தையல்லாத ஒருவனை தன்னுடைய தந்தை என்று வாதிடுவது,அல்லது தான் காணாத ஒன்றைக் கனவில் கண்டதாக கூறுவது,அல்லது ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை நபியவர்கள் சொன்னதாகச் சொல்வது நிச்சயமாக பெரும் பொய்யில் ஒன்றாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு