عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 110]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'யார் என்மீது (நான் கூறியதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 110]
'யார் நபி மீது வேண்டுமேன்றே பொய்யாக ஒரு வார்த்தை அல்லது செயலை நபி கூறியதாக கூறுகின்றாரோ மறுமையில் அவரின் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும். அதுவே நபி மீது பொய்யுரைத்ததற்கான கூலியாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள்'.