عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما : أن النبي صلى الله عليه وسلم قال: «بلغوا عني ولو آية، وحدثوا عن بني إسرائيل ولا حرج، ومن كذب علي متعمدا فَلْيَتَبَوَّأْ مقعده من النار».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) கூறுகின்றார்கள் : "என்னைப் பற்றி ஒரு வார்த்தையேனும் எத்தி வையுங்கள். பனூ இஸ்ராயீல்கள் (இஸ்ரவேல் சந்ததியினர்) பற்றி கூறுங்கள் குற்றமில்லை. என் மீது வேண்டுமென்றே யாரேனும் ஒரு பொய்யுரைத்தால் அவர் நரகத்திலே தனக்குரிய ஒதுங்குமிடத்தை எடுத்துக் கொள்வாராக".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

ஹதீஸின் கருத்து: அல்குர்ஆன் அஸ்ஸுன்னா ஆகியவற்றிலிருந்து என்னிடம் பெற்றுக் கொண்ட அறிவை மனிதர்களுக்கு அறிவியுங்கள். அறிவிப்பவர் விஷயத்தை தெரிந்தவராகவும், விளங்கியவராகவும் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு நீங்கள் அறிவிக்கும் விடயம் அல்குர்ஆனின் ஒரு வசனம் போன்று சிறியதாக இருந்தாலும் சரியே. பொதுவாக ஊரில் மக்களுக்கு கற்பித்து, மார்க்க விடயங்களை அறிவூட்டும் அழைப்பாளர்கள் இருக்கும் போது எத்திவைத்தல் என்ற கடமை யார் மீதும் குறிப்பாக மாட்டாது. மாறாக ஸுன்னத்தாகும். யாரும் இல்லாத போது குறிப்பிட்ட ஒருவர் மீது கடமையாகிவிடும். குர்பானை சாப்பிடுவதற்காக வானத்திலிருந்து நெருப்பு இறங்கியது, காளை கன்றை வணங்கியதற்கு தவ்பாவாக தம்மைத் தாமே கொன்றது போன்ற இஸ்ரவேலர்களுக்கு நிகழ்ந்தவைகளை அறிவித்தல், அல்லது குர்ஆனில் கூறப்பட்டுள்ள மேற்கூறிய சரித்திரங்களிலிருந்து பெறப்படும் படிப்பினைகள், உபதேசங்கள் என்பவற்றை விளக்குவது என்பனவற்றில் குற்றமில்லை. மேலும் யார் என் மீது பொய் கூறுவாரோ அவர் நரகிலே தனக்கென ஓர் இடத்தை எடுத்துக் கொள்ளட்டும். அதாவது அல்லாஹ்வின் தூதர் மீது பொய் கூறுவது சாதாரண மனிதர் மீது பொய் கூறுவது போலல்ல. அல்லாஹ்வின் தூதர் மீது பொய் சொல்வதானது அல்லாஹ் மீது பொய் சொன்னதாகும். மேலும் அது ஷரீஅத்தின் மீது பொய் கூறுவதாகும். ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது வஹீ மூலமாகும். அது அல்லாஹ்வின் ஷரீஅத்தைச் சேர்ந்ததாகும். ஆகவே அதற்குரிய தண்டனையும் கடினமாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ்வின் மார்க்கத்தை எத்திவைப்பது கடமையாகும், ஒரு மனிதன் தான் விளங்கிய விடயத்தை அது குறைவாக இருந்தாலும் எத்திவைக்க வேண்டும்.
  2. அல்லாஹ்வின் மார்க்கத்தை எத்திவைப்பதற்காக அதனைக் கற்பது அவசியமாகும், இது ஒரு சமூகக் கடமையாகும், போதியளவு அறிஞர்கள் இதனை மேற்கொண்டால் ஏனையோரின் கடமை தளர்ந்து விடும், யாருமே மேற்கொள்ளவிட்டால் அனைவரும் குற்றவாளியாகி விடுவர்.
  3. இஸ்ரவேலர்களுக்கு நிகழ்தவற்றை அவை பொய்யென உறுதியாகாத பட்சத்தில் படிப்பினைக்காக அறிவிக்க முடியும், அவற்றில் ஆதாரபூர்வமான, இஸ்லாமிய மார்க்கத்திற்கு மிக நெருங்கியவற்றைத் தேடி அறிவிக்க வேண்டும்.
  4. நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யுரைப்பது ஹராமாகும், அது பெரும்பொவங்களில் ஒன்றாகும்.
  5. பொய்யில் வீழ்ந்திடாமலிருக்க பேச்சுக்களிலும், ஹதீஸ் அறிவிப்பதிலும் பேணுதலுடன், உண்மையைக் கடைபிடிப்பதை இங்கு தூண்டப்பட்டுள்ளது. குறிப்பாக அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இதனைக் கவனிக்க வேண்டும். இதற்கு முறையான, நுட்பமான அறிவு மிகத் தேவையாகும்.
மேலதிக விபரங்களுக்கு