+ -

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ:
أَنَّ أَعْرَابِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الجَنَّةَ، قَالَ: «تَعْبُدُ اللَّهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ المَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ المَفْرُوضَةَ، وَتَصُومُ رَمَضَانَ» قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا، فَلَمَّا وَلَّى قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الجَنَّةِ، فَلْيَنْظُرْ إِلَى هَذَا».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1397]
المزيــد ...

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
கிராமவாசி ஒருவர் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் வந்து, எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செய்தால் சொர்க்கம் செல்ல வேண்டும்.என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீர் அல்லாஹ்வையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமளானில் நோன்பு நோற்க வேண்டும் என்றார்கள். அதற்கு அவர், என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக வேறெதையும் செய்யமாட்டேன் என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ) இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்! என்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 1397]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கிராமப்புரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் தனக்கு சுவர்கம் செல்வதற்குரிய செயலொன்றை காட்டித்தருமாறு கோரி நபியர்வகளிடம் வந்தார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சுவர்கம் நுழைவதும்; நரகத்திலிருந்து மீட்சி பெறுவதும் இஸ்லாத்தின் கடமைகளான அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி வழிபட்டு அவனுக்கு எதனையும் இணைவைக்காது வாழ்வதில் தங்கியுள்ளது எனப் பதிலளித்தார்கள். அத்துடன் தினமும் அடியார்களுக்கு அல்லாஹ் கடமையாக்கியுள்ள ஐவேளைத் தொழுகைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் உமக்கு அல்லாஹ் கடமையாக்கியுள்ள உமது செல்வத்திற்கான ஸகாத்தை வழங்குவதுடன்,அதனை ஸகாத் பெற தகுதியானவர்ளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் அதே போன்று ரமழான் மாதத்தில் நோன்பை பேணி கடைபிடித்தொழுக வேண்டும். இவ்வாறு நபியவர்கள் கூறிய போது வந்த அந்த மனிதர் எனது ஆன்மா எவனின் கைவசம் உள்ளதோ அவனின் மீது ஆணையாக நபியவர்களே உங்களிடமிருந்து செவிமடுத்த கட்டாயக் கடமைகளுக்கு மேலதிகமாக எந்த வணக்கத்தையும் செய்யமாட்டேன் அவற்றில் எதனையும் குறைக்கவும் மாட்டேன் என சத்தியம் செய்து கூறினார். அந்த மனிதர் திரும்பிச் சென்றதும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (உங்களில் ) யார் சுவர்க்க வாதிகளில் ஒருவரை பார்த்து சந்தோசப்பட விரும்புகிறாரோ அவர் இந்த கிராமப்புற அரபியை பார்த்துக்கொள்ளட்டும் என்றார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இஸ்லாமிய பிரச்சாரத்தில் முதலில் ஆரம்பிக்க வேண்டியது அல்லாஹ்வை வணக்கவழிபாடுகளில் ஏகத்துவப்படுத்துவதாகும்.
  2. புதிதாக இஸ்லாத்தை தழுவியோருக்கு அடிப்படைக் கடமைகளை மாத்திரம் கற்றுக்கொடுக்க வேண்டும்
  3. இறை பிரச்சாரத்தில் (தஃவாவில் ) படிமுறை ஒழுங்கை பின்பற்றுவது அவசியமாகும்.
  4. மார்க்க விவகாரங்களை கற்றுக்கொள்வதில் குறித்த மனிதருக்கிருந்த ஆர்வத்தை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டியுள்ளமை.
  5. முஸ்லிம் கட்டாயக்கடமைகளை நிறைவேற்றுவதோடு மாத்திரம் சுருக்கிக்கொண்டாலும் அவனுக்கு வெற்றி கிடைக்கும். இது சுன்னத்தான வணக்கங்களில் அலட்சியமாக இருப்பது என்ற கருத்தை காட்ட மாட்டாது காரணம் சுன்னத்தான உபரியான வணக்கங்கள் பர்ழான வணக்கங்களில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வதாக உள்ளது ஆகையால் உபரியான வணக்கங்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்ளல் வேண்டும்.
  6. குறிப்பிட்ட சில வணக்கங்களை இங்கு விசேடமாக குறிப்பிட்டிருப்பது அதன் முக்கியத்தை எடுத்துக்காட்டுவதோடு அதனை செய்வதற்கு தூண்டுவதாகவும் அமைகிறது. ஆனால் ஏனைய கட்டாயக்கடமைகள் அவசியமல்ல என்பது இதன் கருத்தல்ல.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Итолёвӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوزبكية الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு