عن أبي موسى الأشعري رضي الله عنه مرفوعاً: «إذا أراد الله تعالى رحمة أُمَّة، قَبض نبيَّها قبلها، فَجَعَلَهُ لها فَرَطًا وسَلفًا بين يديها، وإذا أراد هلَكَةً أُمَّة، عَذَّبَها ونَبِيُّهَا حَيٌّ ، فأهْلَكَها وهو حَيٌّ يَنظرُ، فأقرَّ عينَه بِهَلاَكِهَا حين كذَّبُوه وعَصَوا أمرَه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
"அல்லாஹ் ஒரு சமூகத்தின் மீது அருள் புரிய நாடினால் அதன் அழிவுக்கு முன் அதன் நபியைக் கைப்பற்றி விடுவான்.பின்னர் அவரை,அந்த சமூகத்தினருக்கு சிபாரிசு செய்கின்றவராக ஆக்குவான்.அதாவது ஒரு சமூகத்தை அல்லாஹ் அழித்துவிட நாடினால் அதன் நபி உயிருடன் இருக்கும் போதே அதனை தண்டிப்பான்.மேலும் அவர் உயிருடன் இருந்து அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதனை அழித்துவிடுவான்.இவ்வாறு அந்த சமூகம் தம்மைப் பொய்யன் எனக் கூறி,தமது கட்டளைக்கு மாறு செய்து கொண்டிருக்கும் போதே தனது சமூகம் அழிந்து போவதைக் கண்டு அவரின் கண் குளிர்ச்சியடையும்."என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]
ஹதீல் விளக்கம்:அல்லாஹ் ஏதேனும் ஒரு சமூகத்தினர் மீது அருள் புரிய நாடினால் அவர்கள் எஞ்சியிருக்க அவர்களின் நபியின் உயிரை அவன் கைப்பற்றிக் கொள்வான்.பின்னர் சுவர்க்கத்தில் அவர்களை வரவேற்கின்றவராகவும்,அவர்களுக்காக சிபாரிசு செய்கின்றவராகவும் அவர் இருப்பார்.الفرط என்பதன் பொருள் பின்னர் வருகை தர இருப்பவர்களின் வருகையை முன்னிட்டு தேவையான ஒழுங்குகளைச் செய்பவர் என்பதாகும்.பின்னர் தனக்குப் பின்னால் இருப்பவருக்கு சிபாரிசு செய்கின்றவர் என்ற கருத்தில் இது பயன் படுத்தப்படலாயிற்று.பிரிதொரு ஹதீலில் "أنا فرطكم على الحوض" "நீர் தடாகத்தில் உங்களுக்கு முன்னர் நான் இருப்பேன்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என்று பதிவாகியுள்ளது.அதாவது உங்களுக்குத் தன்னீர் எடுத்துத் தருவதற்காக உங்களுக்கு முன்னர் நான் அங்கு இருப்பேன்,என்பதாகும்