عن عبادة بن الصامت رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم "مَنْ شهِد أنْ لا إله إلا الله وحده لا شرِيك له وأنَّ محمَّدا عبده ورسُولُه، وأنَّ عِيسى عبدُ الله ورسُولُه وكَلِمَتُه أَلقَاها إِلى مريم ورُوُحٌ مِنه، والجنَّة حَقٌّ والنَّار حقٌّ، أَدْخَلَه الله الجنَّة على ما كان مِنَ العمَل".
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் 'ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (ஆகுக! என்னும்) ஒரு வார்ததை(யால் பிறந்தவர்)' என்றும், அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம், நரகம் (இருப்பது) உண்மை தான்' என்றும் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
ஏகத்துவ வார்த்தையை மொழிந்து, அதன் அர்த்தத்தை அறிந்து, அதன்படி செயல்பட்டு, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமை, தூதர் என சாட்சியம் கூறி, ஈஸா (அலை) அவர்களும் அல்லாஹ்வின் அடிமை, தூதர் என சாட்சியம் கூறி, அவர்கள் மர்யம் (அலை) அவர்களிலிருந்து "ஆகுக" எனும் வார்த்தை மூலம் படைக்கப்பட்டார்கள் என ஏற்பதுடன், யூத எதிரிகள் அவ் அன்னையர் மீது சுமத்திய பலியை விட்டும் அன்னையரைப் பரிசுத்தப்படுத்தி, விசுவாசிகளுக்கு சுவனமும், நிராகரிப்பாளர்களுக்கு நரகமும் உண்டென நம்பிக்கை கொண்டு அதிலேயே மரணித்தால் அவர் செய்த நற்செயல்களுடன் சுவனம் நுழைவார் என நபியவர்கள் எமக்கு அறிவிக்கின்றார்கள்.