+ -

عن عبد الله بن عمرو بن العاص - رضي الله عنه- مرفوعاً: "مَن ردته الطِّيَرَة عن حاجته فقد أشرك، قالوا: فما كفارة ذلك؟ قال: أن تقول: اللهم لا خير إلا خيرك، ولا طَيْرَ إِلَّا طَيْرُكَ ولا إله غيرك".
[صحيح] - [رواه أحمد]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "யாருடைய தேவை நிறைவேறுவதிலிருந்து சகுனம் தடுக்கின்றதோ அவர் இணைவைத்து விட்டார், அதற்குரிய பரிகாரம் என்ன என வினவ, இறைவா நலவு உன்னிடமிருந்து மாத்திரம் தான், நல்ல சகுனமும் உன்னிடமிருந்து மாத்திரம் தான், உன்னைத் தவிர வேறு இறைவனில்லை என்று கூறட்டும்".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]

விளக்கம்

தான் முன்னெடுக்கவிருக்கும் ஒரு விடயத்தை விட்டும் யாரை தீய சகுனம் தடுக்கின்றதோ அவர் இணைவைப்பின் ஒரு வகையைச் செய்து விட்டார். இப்பாரிய பாவத்திற்கான பரிகாரம் என்னவென நபித்தோழர்கள் வினவிய போது அல்லாஹ்விடம் முழுப் பொறுப்பையும் சாட்டக்கூடிய, அவனுக்கு மாத்திரம்தான் சக்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்தக் கூடிய மேற்கண்ட வார்த்தையை மொழியுமாறு கூறினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தீய சகுனத்தின் காரணமாக முன்னெடுக்கவிருந்த செயலை விடுவதும் இணைவைப்பாகும்.
  2. இணைவைப்பாளனின் பாவமன்னிப்பும் முறையாக இருக்கும்பட்சத்தில் ஏற்கப்படும்.
  3. சகுனம் பார்த்தவர் செய்ய வேண்டிய பரிகாரம் இங்கு கூறப்பட்டுள்ளது.
  4. நலவு, கெடுதி அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன.
மேலதிக விபரங்களுக்கு