+ -

عن عدي بن حاتم رضي الله عنه : "أنه سمع النبي صلى الله عليه وسلم يقرأ هذه الآية: "اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلاَّ لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا لا إِلَهَ إِلاَّ هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ" فقلت له: إنا لسنا نعبدهم، قال: أليس يُحَرِّمُونَ ما أحل الله فتُحَرِّمُونَهُ؟ ويُحِلُّونَ ما حَرَّمَ الله فتُحِلُّونَهُ؟ فقلت: بلى، قال: فتلك عبادتهم".
[صحيح] - [رواه الترمذي]
المزيــد ...

அத்ய் பின் ஹாதிம் (ரலி) கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் "அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களோ ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்" எனும் வசனத்தை ஓதத் தான் கேட்ட போது நாம் அவர்களை வணங்குவதில்லையே என்று கூறினேன். அப்போது நபியவர்கள் : "அல்லாஹ் ஹலாலாக்கியதை அவர்கள் ஹராமாக்க நீங்களும் ஹராமாக்கவில்லையா? அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்க நீங்களும் ஹலாலாக்கவில்லையா? எனக் கேட்க, நான் ஆம் என்றேன், "அதுதான் அவர்களை வணங்குவதாகும்" என்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

யூத, கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமாக தமது மதகுருகள் உருவாக்கும் சட்டத்திற்குப் கட்டுப்படுவதன் மூலம் அம்மதகுருக்களைக் கடவுள்களாக எடுத்துக் கொண்டார்கள் என்ற செய்தியை உள்ளடக்கிய இறைவசனத்தை நபியவர்கள் ஓதும் போது செவிமடுத்த இந்த நபித்தோழருக்கு அதன் கருத்தில் குழப்பநிலை தோன்றியது, ஏனெனில் வணக்கம் என்பது சிரம்பணிவது போன்றன மாத்திரம் என அவர் விளங்கி வைத்திருந்தார். அல்லாஹ், ரஸூலின் சட்டத்திற்கு மாற்றமாக ஹலாலை ஹராமாக்குவதிலும், ஹராமை ஹலாலாக்குவதிலும் தமது மதகுருக்களுக்குக் கட்டுப்படுவதும் அவர்களை வணங்குவதுதான் என நபியவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. படைப்பினங்களில் அல்லாஹ்வின் சட்டத்தை மாற்றும் அறிஞர்கள் போன்றவர்களுக்கு- அவர்கள் ஷரீஅத்திற்கு முரண்படுகின்றார்கள் என்று அறிந்தும்- கட்டுப்படுவது பெரிய இணைவைப்பாகும்.
  2. ஒன்றை ஆகுமாக்குவதும், தடுப்பதும் அல்லாஹ்வின் உரிமையாகும்.
  3. வழிப்படுவதில் இணைவைப்பு எனும் இணைவைப்பின் வகைகளில் ஒன்று இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
  4. அறிவீனர்களுக்குக் கற்றுக் கொடுப்பதும் மார்க்கத்தில் ஒரு பகுதியாகும்.
  5. வணக்கம் என்பது அல்லாஹ் விரும்பி, பொருந்திக் கொள்ளும் அனைத்து வித உள்ரங்க, வெளிப்படையான சொல், செயல் அனைத்தையும் உள்ளடக்கும் பரந்த பொருள் கொண்ட ஒரு வார்த்தையாகும்.
  6. யூத, கிறிஸ்தவ மதகுருக்கள் வழிகேட்டிலேயே உள்ளனர்.
  7. யூத, கிறிஸ்தவர்களும் இணைவைக்கின்றனர் என்பதை இந்நபிமொழி உறுதி செய்கின்றது.
  8. அனைத்து இறைத்தூதர்களினதும் மார்க்கத்தின் அடிப்படை ஒன்றுதான், அதுதான் ஓரிறைக் கொள்கையாகும்.
  9. படைத்தவனுக்கு மாறு செய்யும் விடயத்தில் படைப்பினத்திற்கு வழிப்படுவது அவர்களை வணங்குவதாகும்.
  10. அறியாத சட்டங்களை அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
  11. அறிவு கற்பதில் நபித்தோழர்களின் ஆர்வத்தை இங்கு காணலாம்.
மேலதிக விபரங்களுக்கு