உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

இறைவா எனது சமாதியை வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே, தமது நபிமார்களின் சமாதிகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்ட ஒரு கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாகி விட்டது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்தவர் நிராகரித்து விட்டார், அல்லது இணைவைத்து விட்டார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அது ஏதுவென வினவப்பட்ட போது முகஸ்துதி எனக் கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
"அல்லாஹ் ஹலாலாக்கியதை அவர்கள் ஹராமாக்க நீங்களும் ஹராமாக்கவில்லையா? அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்க நீங்களும் ஹலாலாக்கவில்லையா? எனக் கேட்க, நான் ஆம் என்றேன், "அதுதான் அவர்களை வணங்குவதாகும்" என்றார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
சூனியத்தை எடுப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது அது ஷைத்தானின் செயலாகும் எனக் கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யாருடைய தேவை நிறைவேறுவதிலிருந்து சகுனம் தடுக்கின்றதோ அவர் இணைவைத்து விட்டார், அதற்குரிய பரிகாரம் என்ன என வினவ, இறைவா நலவு உன்னிடமிருந்து மாத்திரம் தான், நல்ல சகுனமும் உன்னிடமிருந்து மாத்திரம் தான், உன்னைத் தவிர வேறு இறைவனில்லை என்று கூறட்டும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் அவனை சந்திப்பவர் சுவனம் நுழைவார். அவனுக்கு இணைவைத்த நிலையில் சந்தித்தவர் நரகில் நுழைவார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
"மேலும் அவர்கள்: “உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் சொல்கின்றனர்." எனும் வசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் : இவை நபி நூஹ் (அலை) அவர்களது சமூகத்தில் வாழ்ந்த நல்லடியார்களது பெயர்களாகும் என்றார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது