عن محمود بن لبيد رضي الله عنه مرفوعاً: "أَخْوَفُ ما أخاف عليكم: الشرك الأصغر، فسئل عنه، فقال: الرياء".
[صحيح] - [رواه أحمد]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அது ஏதுவென வினவப்பட்ட போது முகஸ்துதி எனக் கூறினார்கள்".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]
நபியவர்கள் எம்மைப் பற்றி அஞ்சுவதாக இந்நபிமொழியில் கூறுகின்றார்கள். சிறிய இணைவைப்பு ஏற்படுவதையே அதிகமாக அவர்கள் அஞ்சுகின்றார்கள். ஏனெனில் இது தமது சமூகத்தின் மீது அன்னார் கொண்ட அதீத அன்பு, கருணை, அவர்களை சீர்திருத்துபவற்றின் மீதான அன்னாரின் ஆர்வம், சிறிய இணைவைப்பிற்கான காரணியான முகஸ்துதியின் வீரியம், அதன்பால் இட்டுச் செல்லும் அதிக வழிகள் இவற்றை அன்னார் அறிந்து வைத்திருந்ததாலுமே இவ்வாறு அஞ்சுகின்றார்கள். சில வேளை முஸ்லிம் அறியாமலேயே அது ஊடுறுவி, தீங்கு விளைவிக்கும், இதனால்தான் அவர்களை இதனை விட்டும் எச்சரிக்கை செய்து, அச்சுறுத்தினார்கள்.