+ -

عن ابن عباس رضي الله عنهما في قول الله تعالى : (وَقَالُوا لا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلا تَذَرُنَّ وَدًّا وَلا سُوَاعًا وَلا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا) قال: "هذه أسماء رجال صالحين من قوم نوح، فلما هَلَكوا أَوحى الشَّيطان إلى قَومِهِم أنِ انْصِبُوا إلى مَجَالِسِهِم الَّتي كانوا يَجْلِسون فيها أنصَابًا، وسَمُّوها بأسمَائِهِم، فَفَعَلُوا، ولم تُعْبَد، حتَّى إِذَا هَلَك أُولئك ونُسِيَ العلم عُبِدت".
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

"மேலும் அவர்கள்: “உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் சொல்கின்றனர்." எனும் வசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் : இவை நபி நூஹ் (அலை) அவர்களது சமூகத்தில் வாழ்ந்த நல்லடியார்களது பெயர்களாகும், அவர்கள் மரணித்ததும் அவர்கள் உட்கார்ந்த இடங்களில் சிலைகளை நட்டி, அவர்களுடைய பெயர்களையே வைக்கும் படி ஷைத்தான் அச்சமூகத்திற்கு அறிவித்தான், அவர்களும் அவ்வாறே செய்தார்கள், எனினும் அச்சிலைகள் வணங்கப் படவில்லை, அச்சமூகம் மரணித்து, அறிவும் மறக்கடிக்கப்பட்டதும் அச்சிலைகள் வணங்கப்பட்டது என்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

விளக்கம்

இந்த வசனத்தில் நூஹ் (அலை) அவர்களின் சமூகம் தொடர்ந்து வணங்க வேண்டும் என தமக்கிடையே உபதேசித்துக் கொண்ட அந்த கடவுள்களெல்லாம் அடிப்படையில் அக்காலத்தில் அவர்களுடன் வாழ்ந்த நல்லடியார்களின் பெயர்களாகும். ஷைத்தானின் வசப்படுத்தல் காரணமாக அவர்கள் இவ் நல்லடியார்கள் விடயத்தில் அளவு கடந்து சென்று அவர்களுடைய உருவங்களை நட்டு, இறுதியில் அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படும் சிலைகளாக இவை மாறிவிட்டதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நல்லடியார்கள் விடயத்தில் அளவு கடந்து செல்வது அல்லாஹ் அல்லாமல் அவர்களை வணங்கி, மார்க்கத்தை அறவே விடக் காரணமாகின்றது.
  2. உருவப்படங்கள் செய்வது, அவற்றைத் தொங்க விடுவது- குறிப்பாக முக்கிய பிரமுகர்களது உருவங்கள்- போன்றவற்றை விட்டும் இந்நபிமொழி எச்சரிக்கின்றது.
  3. ஷைத்தானின் சூழ்ச்சி, சத்தியத்தின் போர்வையில் அசத்தியத்தை அவன் காட்டும் விதத்திலிருந்து எச்சரித்தல்.
  4. செய்பவரின் நோக்கம் நல்லதாக இருந்தாலும் மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட புதிதான நூதனங்களை விட்டும் எச்சரித்தல்.
  5. உருவப்படம் செய்வது (புகைப்படம் பிடிப்பது) இணைவைப்பிற்கு இட்டுச் செல்லக்கூடியதாகும், எனவே உயிருள்ளவற்றை உருவமாகச் செய்வதை (புகைப்படம் பிடிப்பதை) விட்டும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
  6. அறிவு இருப்பதன் மகத்துவத்தையும், அது இல்லாமல் போவதால் ஏற்படும் விளைவையும் அறிந்து வைத்தல்.
  7. அறிவு மங்குவதற்கான காரணம் அறிஞர்கள் மரிப்பதாகும்.
  8. கண்மூடித் தனமாகப் பின்பற்றுவதை எச்சரித்தல், அது சிலவேளை இஸ்லாத்தை விட்டும் நலுவக் காரணமாகி விடும்.
  9. இணைவைப்பு புராதன சமூகங்களிலிருந்து இருந்து வந்த தொண்மையான ஒரு செயலாகும்.
  10. மேற்கூறப்பட்ட ஐந்து பெயர்களும் நூஹ் (அலை) அவர்களது சமூகத்தினரின் கடவுள்களாகும்.
  11. அசத்தியவாதிகள் தமது அசத்தியத்தில் கைகோர்ப்பதையும், ஒத்துழைப்பதையும் இச்செய்தி தெளிவுபடுத்துகின்றது.
  12. தனி நபர்களின்றி பொதுவாக இறை நிராகரிப்பாளர்களை சபிப்பது கூடும்.
மேலதிக விபரங்களுக்கு