உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

அல்லாஹ் (ஒருவர் செய்யும்) நல்ல செயல்களையும், தீய செயல்களையும் எழுதிக் கொள்கிறான். அதற்கு மேல் அவன் அதனை விளக்கியும் இருக்கிறான். ஒருவர் நல்ல செயலை செய்ய நினைத்து அதை செய்து முடிக்க முடியாவிட்டாலும் அல்லாஹ் அதை ஒரு முழுமையான நல்ல செயலாக எழுதிக் கொள்கின்றான். ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்ய நினைத்து, அதைச் செய்தும் முடிப்பாரேயானால் அல்லாஹ் அதை பத்து முதல் எழுநூறு தடவை அல்லது அதற்கும் பன்மடங்கு அதிகமானதாக குறித்துக் கொள்கிறான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நிச்சயமாக அல்லாஹ் உங்களது உடலையோ, தோற்றத்தையோ பார்ப்பதில்லை, இருப்பினும் உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
"எனது அடியான் என்னைப் பற்றி எண்ணுகின்ற பிரகாரம் நான் இருப்பேன்.எனவே அவன் எங்கு என்னை நினைவு படுத்துகின்றானோ அங்கு அவனுடன் நான் இருப்பேன்"என்று அல்லாஹ் கூறினான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
உலகில் ஒரு அடியான் இன்னொரு அடியானின் தவறை மறைத்து விடுவானாகில் மறுமையில் அவனுடைய தவறை அல்லாஹ் மறைக்காமல் இருக்கமாட்டான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்லாஹ் ஒரு சமூகத்தின் மீது அருள் புரிய நாடினால் அதன் அழிவுக்கு முன் அதன் நபியைக் கைப்பற்றி விடுவான்.பின்னர் அவரை.அந்த சமூகத்தினருக்கு சிபாரிசு செய்கின்றவராக ஆக்குவான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உங்களிடம் இருக்கின்றன.அவை விவேகமும்,நிதானமுமாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு