+ -

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا، إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51] وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172] ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ: يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1015]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர எதனையும் அவன் ஏற்கமாட்டான். அல்லாஹ் தூதர்களுக்கு ஏவியதையே விசுவாசிகளுக்கும் ஏவினான். "தூதர்களே! நல்லவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், இன்னும், நற்செயலைச் செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்" (ஸூரா முஃமினூன் : 51), மேலும் கூறுகின்றான் "நம்பிக்கைக் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு - (வணக்கத்திற்குரியவனான) அவனையே வணங்குபவர்களாக இருந்தால் - நீங்கள் நன்றி செலுத்துங்கள்." (ஸூரா அல் பகரா : 172) பின்பு நபியவர்கள் ஒரு மனிதனைப் பற்றிக் கூறினார்கள். அவன் நீண்ட ஒரு பயணத்தில், பரட்டைத் தலையுடன், புழுதி படிந்த நிலையில், தனது இரு கைகளையும் உயர்த்தி, 'யா ரப்பு! யா ரப்பு!' எனப் பிரார்த்திக்கின்றான். ஆனால், அவனது உணவு ஹராமானது, அவனது குடிபானமும் ஹராமானது, அவனது ஆடையும் ஹராமானது, அவன் ஹராமினாலே உணவு ஊட்டப்பட்டுள்ளான். அவனுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படும்!'

[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 1015]

விளக்கம்

நிச்சயமாக அல்லாஹ் குறைகள் மற்றும் பலவீனங்களை விட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட, பரிசுத்தமானவன் என்றும், பரிபூரணம் மிக்க பண்புகள் கொண்டவன் என்றும் செயற்கள், வார்த்தைகள் மற்றும் நம்பிக்கைகள் என அனைத்திலும் அவனுக்கென்றுத் தூய்மையாக இருக்கும், நபியுடைய வழிக்கு நேர்பட்டிருக்கும் பரிசுத்தமானதை மாத்திரமே அல்லாஹ் ஒப்புக் கொள்வான் என்றும் நபியவர்கள் இங்கு அறிவிக்கின்றார்கள். அவ்வாறு மாத்திரம் தான் அல்லாஹ்வை நெருங்கப்படவேண்டும். ஒரு மனிதனின் அமல் பரிசுத்தமடைவதற்கான மிக முக்கியமான ஒரு காரணி, அவனது உணவு ஹலாலானதாகவும், தூய்மையானதாகவும் இருப்பதாகும். அதனூடாகவே அவனது அமல் பரிசுத்தமடைகின்றது. இதனால் தான் அல்லாஹ், ரஸூல்மார்களுக்கு ஹலாலானதை சாப்பிட்டு, நல்லமல்கள் செய்யுமாறு ஏவியது போன்று, விசுவாசிகளுக்கும் ஏவியுள்ளான் "தூதர்களே! நல்லவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், இன்னும், நற்செயலைச் செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்" , "நம்பிக்கைக் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு - (வணக்கத்திற்குரியவனான) அவனையே வணங்குபவர்களாக இருந்தால் - நீங்கள் நன்றி செலுத்துங்கள்."
பின்பு நபியவர்கள் துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான பின்வரும் காரணிகளைப் பயன்படுத்தியும், அமல்களைப் பாழ்ப்படுத்தி, துஆ ஏற்றுக்கொள்ளப்படத் தடையாக இருக்கும், 'ஹராமாண உணவை' நபியவர்கள் எச்சரிக்கின்றார்கள்.
முதலாவதாக, ஹஜ், ஜிஹாத், உறவுகளை சேர்ந்து நடத்தல் போன்ற வணக்கங்களுக்காக நீண்ட பயணம் செய்தல்.
இரண்டாவதாக, தலைமுடியை வாராமல், பரட்டைத் தலையுடன், நிறம் மாறிய நிலையில், தனது ஆடைகளும் புழுதிபட்ட பட்டநிலையில் இருத்தல். எனவே இவர் ஒரு நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றார்.
மூன்றாவதாக, தனது இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, துஆக் கேட்டல்.
நான்காவதாக, அல்லாஹ்வின் பெயர்களை முன்னிறுத்தி, யா ரப்பு! யா ரப்பு! என மீண்டும் மீண்டும் கேட்டல்.
துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இவ்வாறான காரணங்கள் இருந்தும், அது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஏனெனில், அவனது உணவும், பானமும், ஆடையும் ஹராமாகும். அவன் ஹராமாலேயே ஊட்டப்பட்டுள்ளான். இவ்வாறான தன்மை உடையவர்களுக்கு பதிலளிக்கப்படுவதென்பது மிகத் தூரமானது. அவனுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படும்?

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ் தஆலா, தன்னிலும், தனது பண்புகளிலும், தனது செயற்களிலும், தனது சட்டங்களிலும் பரிபூரணமிக்கவன்.
  2. அமல்களை அல்லாஹ்வுக்கென்று உளத் தூய்மையுடன், நபியவர்களைப் பின்பற்றிச் செய்யுமாறு ஏவப்பட்டுள்ளமை.
  3. அமல்களை நோக்கி ஆர்வமூட்டும் அம்சங்களைப் பயன்படுத்தல். அதாவது, நபியவர்கள், 'நிச்சயமாக அல்லாஹ், தூதர்களுக்கு ஏவியதையே, விசுவாசிகளுக்கும் ஏவினான்.' என்று கூறுகின்றார்கள். எனவே, ஒரு முஃமின் இது ரஸூல்மார்களுக்கும் ஏவப்பட்ட ஒன்று என்பதை அறிந்துகொண்டால், அதை ஆர்வத்துடன், உறுதியாக நிறைவேற்றுவான்.
  4. ஹராமானதை சாப்பிடுவது, துஆ ஏற்றுக்கொள்ளப்படத் தடையாக இருக்கும் காரணிகளில் ஒன்றாகும்.
  5. ஐந்து அம்சங்கள் துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான காரணிகளாகும் : 1. நீண்ட பயணம் போதல். ஏனெனில், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான மிக முக்கிய காரணியாகிய, 'பலவீனப்படுதல்' அங்கு இருக்கின்றது. 2. நிர்ப்பந்த நிலை. 3. வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்துதல். 4. அல்லாஹ்வின் ருபூபிய்யாவைத் திரும்பத் திரும்ப பல தடவைகள் கூறிக் கேட்டல். துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகப் பயன்படுத்தமுடியுமான மிக முக்கியமான ஒன்றாக அது இருக்கின்றது. 5. உணவும், குடிபானமும் தூய்மையாக இருத்தல்.
  6. ஹலாலான, தூய்மையான உணவை சாப்பிடுவது, நல்ல அமல்கள் செய்வதற்குத் துணையாக இருக்கும் காரணிகளில் ஒன்றாகும்.
  7. அல் காழீ அவர்கள் கூறுகின்றார்கள் : தூய்மையானது என்பது, அசுத்தமானதற்கு நேர்மாற்றமானதாகும். அது அல்லாஹ்வின் பண்பாகக் கூறப்பட்டால், அவன் குறைகளை விட்டுத் தூய்மைப்படுத்தப்பட்டவன், தீங்குகளை விட்டும் பரிசுத்தமாக்கப்பட்டவன் என்று அர்த்தம் தரும். ஓர் அடியானுக்குப் பண்பாகக் கூறப்பட்டால், கீழ்த்தரமான குணங்கள் மற்றும் அசிங்கமான செயற்களை விட்டும் நீங்கி, அவற்றிற்கு எதிரான குணங்களைக் கொண்டவன் என்று அர்த்தம் தரும். அது சொத்துக்களுக்குப் பண்பாகக் கூறப்பட்டால், ஹலாலான, சிறந்த சொத்துக்களாக இருப்பது அங்கு நாடப்படும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية الموري Малагашӣ Урумӣ Канада الأوزبكية الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு