عَنْ أَبِي مُوسَى رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ، وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2759]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான் (நீட்டுகிறான்)! இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான்! சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (கியாமத் நாள்) வரை ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான்!
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2759]
தனது அடியார்களின் தவ்பாவை –பாவமீட்சியை- அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஒரு அடியான் பகலில் ஒரு பாவத்தை –குற்றத்தை-செய்து இரவில் தனது பாவத்தை மன்னிக்குமாறு தவ்பா செய்தால் அவனது தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கொள்கிறான். ஒரு அடியான் இரவில் பாவமொன்றை செய்து பகலில் அதற்காக தவ்பா செய்தால் அவனின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் அடியார்களின் தவ்பாவினால் மகிழ்ச்சியடைந்து அதனை ஏற்றுக்கொள்ளும் முகமாக அவனின் கரத்தை நீட்டுகிறான். மேற்கிலிருந்து சூரியன் உதயமாகும் வரையில் தவ்பாவின் -பாவமீட்சிக்கான- வாயில் திறந்தே இருக்கும். இது உலக முடிவைக் குறிக்கும். மேற்கில் சூரியன் உதயமானால் தவ்பாவின் வாயில் மூடப்பட்டு விடும்.