عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الجَنَّةِ: يَا أَهْلَ الجَنَّةِ؟ فَيَقُولُونَ: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، فَيَقُولُ: هَلْ رَضِيتُمْ؟ فَيَقُولُونَ: وَمَا لَنَا لاَ نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ؟ فَيَقُولُ: أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالُوا: يَا رَبِّ، وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُ: أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي، فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6549]
المزيــد ...
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்:
அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் 'எங்கள் இரட்சகனே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் 'திருப்தி அடைந்தீர்களா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள் 'உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் 'அதை விடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப் போகிறேன்' என்பான். அவர்கள் 'அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்கள்மீது என் அன்பை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன்' என்று கூறுவான்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 6549]
மறுமையில் அல்லாஹ் சுவர்க்கவாசிகளைப் பார்த்து, சுவர்க்கவாசிகளே! என்று விழித்துப் பேசுவதாக இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அவர்கள் எமது இரட்சகனே உமக்கு அடிபணிந்து உமது உதவியை நாடி நிற்கிறோம் என்று பதில் கூறுவார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியுடன் இருக்கிறீர்களா? என்று கேட்க அதற்கவர்கள் ஆம்' நாம் திருப்தியுடன் உள்ளோம். என்று கூறுதுடன் உனது படைப்புகளில் எவருக்கும் கொடுக்காததை எமக்குக் கொடுத்திருக்கும் போது நாம் திருப்தியடையாமல் இருக்க எமக்கு என்ன நேர்ந்து விட்டது!? என்றும் கூறுவார்கள். அதனைத்தொடர்ந்து அல்லாஹ் அவர்களிடம் இதனை விடவும் மிகவும் சிற்புக்குரிய ஒன்றை தரட்டுமா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் இரட்சகனே! இதனைவிடவும் மிகவும் சிறப்புக்குரியது எது ? என்று அவர்கள் ஆச்சரியமாக கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்கள்மீது என் நிலையான கருணையை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன்' என்று கூறுவான்.