عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «حُجِبت النار بالشهوات، وحُجبت الجنة بالمَكَاره»متفق عليه وهذا لفظ البخاري. وفي رواية لهما: «حُفَّت» بدل «حُجِبت».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "நரகம் ஆசா பாசங்களைக் கொண்டு திரையிடப்பட்டுள்ளது,சுவர்க்கம் விருப்பமற்ற விடயங்களைக் கொண்டு திரையிடப்பட்டுள்ளது". (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம், இவ்வார்த்தை புஹாரியில் இருந்து பெறப்பட்டதாகும். அதே புஹாரி, முஸ்லிமின் மற்றுமொரு அறிவிப்பில் "திரையிடப்பட்டுள்ளது" என்பதற்குப் பதிலாக "சூழப்பட்டுள்ளது" என இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்: சுவர்கத்தை அடையும் வழி மனிதனின் மனம் விரும்பாத காரியங்களின் மூலம் சூழப்பட்டுள்ளது.ஏனெனில் அவன் மனம் எப்போதும் சாவகாசமான விடயங்களின் பக்கமே சாய்கின்றது. மேலும் மனிதனுக்கும் நரகிற்கும்மிடையே திரையாகவுள்ள ஹராமான கருமங்களைச் செய்வதன் மூலமும், வழிபாடுகளை விட்டும் விலகி இருத்தல் மூலமும் அதனை அவன் கிழிக்காத வரையில் அவன் நரகம் புகமாட்டான்.இவ்வாறு எவன் திரையைக் கிழித்து விடுகின்றானோ அப்போதவன் அதன் மூலம் மறைக்கப்பட்ட இலக்கை அடைவான்.எனவே மனம் விரும்பாத விடயங்கள் மூலம்தான் சுவர்க்கத்தின் திரை கிழிக்கப்படுகின்றது.மேலும் ஆசாபாசங்களைச் செய்வதன் மூலம் நரகின் திரை கிழிக்கப்படுகிறது. மனம் விரும்பாத விடயங்களில் : வணக்க வழிபாடுகளின் போது சிரமங்களைத் தாங்கிக் கொள்ளல், பொறுமையுடன் தொடர்ச்சியாக அவற்றைச் செய்து வருதல், கோபத்தைத் தவிர்த்தல், மன்னித்தல், பொருமையாக இருத்தல், தர்மம் செய்தல், தனக்குத் தீங்கு செய்தவனுக்கு உபகாரம் செய்தல், மனோ இச்சைகளைக் கட்டுப்படுத்திப் பொறுமையாக இருத்தல் போன்ற காரியங்கள் அடங்கும். சில வணக்கங்களை ஆன்மா வெறுக்கலாம். முயற்சி செய்தல், உலக இச்சைகளைத் துறத்தல் போன்றன தொழுகையில் உள்ளதால் சில வேளை ஆன்மா அதில் தொடர்ந்திருப்பதை வெறுக்கலாம், சிலவேளை அறப்போரையும் வெறுக்கலாம், பணத்தாசை ஆன்மாவை ஆட்கொள்வதால் தர்மத்தை வெறுக்கலாம். மனிதன் ஏவல்களை எடுத்து நடந்து, விலக்கல்களைத் தவிர்ந்து கொள்வதன் மூலம் தனது ஆசையைத் துண்டித்து, மனோ இச்சைக்கு மாறு செய்தால் அது சுவனம் செல்லவும், நரகத்திலிருந்து தூரமாகவும் காரணமாக அமையும். நரகம் சூழப்பட்டுள்ள ஆசைகளாவன : மது, விபச்சாரம், அந்நியப் பெண்களைப் பார்த்தல், புறம் பேசுதல், களியாட்டங்களில் ஈடுபடல் போன்ற ஹராமாக்கப்பட்ட விடயங்களாகும். அனுமதிக்கப்பட்ட ஆசைகள் இதில் அடங்க மாட்டாது, எனினும் பாவத்திற்கு கொண்டு செல்லாமல் இருப்பதற்காகவும், உள்ளம் வன்நெஞ்சமடையாமல் இருக்கவும், கடமைகளில் கவனம் சிதறாமல் இருக்கவும், உலக இன்பங்களை அடைவதற்காகவே அதிக கவனம் செலுத்தாமல் இருக்கவும் இது போன்ற அனுமதிக்கப்பட்ட ஆசைகளைக் கூட அதிகப்படுத்திக் கொள்வது வெறுக்கத்தக்கதாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தீய, அசிங்கமான விடயங்களை ஆன்மா அழகாகக் கருதி, அவற்றின் பால் சாயும் அளவிற்கு ஷைத்தான் அவற்றை அழகுபடுத்திக் காட்டுவதே மனிதன் ஆசைகளில் வீழ்ந்திடக் காரணமாகும்.
  2. ஒன்றில் பல நலவுகள் இருந்தும் சிலவேளை ஆன்மா அதனை வெறுக்கலாம். அல்லாஹ் கூறுகின்றான் : "போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்".
  3. மனோ இச்சையுடன் போராடி, அதன் இச்சைகள், பரிச்சியமானவைகளை மறக்கடிப்பது அவசியமாகும்.
  4. சுவனம், நரகம் ஆகியன தற்போதுள்ள இரு படைப்பினங்களாகும்.
மேலதிக விபரங்களுக்கு