عن سهل بن سعد رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال:
«مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 6474]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
'தன் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள (நா)வையும், தன் இரு கால்களுக்கிடையே உள்ள மறைவுறுப்பையும் (பாவத்திலிருந்து பாதுகாப்பதாக) எவர் எனக்கு உத்தரவாதமளிக்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் உத்தரவாதம் அளிக்கிறேன்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 6474]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு விடயங்கள் குறித்து அறிவித்துள்ளார்கள். ஒரு முஸ்லிம் பின்வரும் இரண்டு விடயங்களை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவன் சுவர்க்கம் நுழைவான்'
முதலாவது : அல்லாஹ்வை கோபப்படுத்தும் விடயங்களை பேசுவதை விட்டும் நாவை பாதுகாத்தல் .
இரண்டாவது : மானக்கேடானவற்றில் வீழ்வதை விட்டும் மறையுறுப்பை பாதுகாத்தல்.
மேலே குறிப்பிடப்பட்ட இரு உறுப்புகளினாலும் அதிக பாவச்செயல்களும் குற்றங்களும் நிகழ்கின்றன