عن ابن مسعود رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم : «الجنة أقرب إلى أحدكُم من شِرَاكِ نَعْلِه، والنار مِثلُ ذلك».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

நபி (ஸல்)அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்கள் : "சுவனம் உங்களொருவரின் செருப்பு நாரை விட மிக நெருக்கமானதாகும், நரகமும் அதே போன்றுதான்".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

ஒரு மனிதனுக்கு தனது செருப்பு நார் எவ்வளவு சமீபமாக உள்ளதோ அதேபோன்று சுவனமும் நரகமும் அவனுக்கு சமீபமாக உள்ளதாக நபியவர்கள் எமக்கு அறியத் தருகின்றார்கள். அது மனிதனுக்கு மிக நெருக்கமாகவே உள்ளது. ஏனெனில் அவன் சிலவேளை அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் ஒரு வணக்கத்தைச் செய்வான், அது இவ்வளவு தூரம் வந்து சேரும் என நினைக்க மாட்டான். ஆனால் அது அவனை சுவனத்தில் நுழைவித்து விடுகின்றது. சிலவேளை தான் அலட்டிக் கொள்ளாத ஒரு பாவத்தைச் செய்திருப்பான், அது அல்லாஹ்வின் கோபத்திற்குக் காரணமாகி அவனை நரகில் அவன் அறியாமலே பல வருடங்கள் தள்ளிவிடுகின்றது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நன்மை சுவனத்திற்கு இட்டுச் செல்லும், பாவங்கள் நரகிற்கு இட்டுச் செல்லும்.
  2. எண்ணம் முறையாக இருந்து, நற்செயல்களும் செய்தால் சுவனத்தை அடைவது இலகுவான காரியமாகும்.
  3. நன்மையும் பாவமும் சிலவேளை மிக அற்பமான விடயத்திலும் இருக்கலாம். எனவே சிறிய நன்மையாக இருந்தாலும் அதனைச் செய்வதிலும், சிறிய பாவமாக இருந்தாலும் அதனைத் தவிர்ந்து கொள்வதிலும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.
  4. நன்மை குறைவாக இருந்தாலும் அதனைச் செய்வதில் ஆர்வமூட்டல், பாவம் சிறியதாக இருந்தாலும் அதனை விட்டும் எச்சரித்தல்.
  5. கேட்பவர் விரைவாக விளங்குவதற்காக உதாரணங்கள் கூறி தெளிவுபடுத்தல்.
மேலதிக விபரங்களுக்கு