عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ رضي الله عنه قَالَ:
كُنْتُ جَالِسًا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَجُلاَنِ يَسْتَبَّانِ، فَأَحَدُهُمَا احْمَرَّ وَجْهُهُ، وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا ذَهَبَ عَنْهُ مَا يَجِدُ، لَوْ قَالَ: أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ، ذَهَبَ عَنْهُ مَا يَجِدُ» فَقَالُوا لَهُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ»، فَقَالَ: وَهَلْ بِي جُنُونٌ؟
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 3282]
المزيــد ...
ஸுலைமான் பின் ஸுரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள்.
ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள், ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவீராக!› என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள். அதற்கு அவர், ‘‘எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்டார்.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري - 3282]
நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் இரு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக் கொண்டார்கள். ஒருவரது முகம் சிவந்து போயிருந்தது, அவரது கழுத்தைச் சூழாக உள்ள நரம்புகள் புடைத்துப் போயிருந்தன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனக்கு ஒரு வார்த்தை தெரியும். அதை இவர் கூறினால், இவரை விட்டும் கோபம் அகன்று விடும். 'எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்' என்று இவர் கூறுவது நல்லது.'
அப்போது நபித் தோழர்கள் அம்மனிதனிடம், ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுமாறு நபியவர்கள் ஏவுகின்றார்கள் எனக் கூறினார்கள்.
அப்போது, 'நான் பைத்தியக் காரனா?' எனக் கேட்டார் அம்மனிதர். பைத்தியம் உள்ளவர்கள் தான் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடவேண்டும் என நினைத்துவிட்டார் போலும்.