عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ:
«إِيَّاكُمْ وَالظَّنَّ؛ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ، وَلَا تَحَسَّسُوا، وَلَا تَجَسَّسُوا، وَلَا تَحَاسَدُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا تَبَاغَضُوا، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6064]
المزيــد ...
நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். தேடிச் செல்லாதீர்கள் ஒருவருக்கொருவார் பொறாமை கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், கோபித்துக் கொள்ளாதீர்கள், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள் என்ற வகையில் சகோதரர்களாக இருங்கள்.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري - 6064]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் பகைமை மற்றும் பிரிவினைக்கு வழிவகுக்கும் விடயங்கள்; சிலவற்றை எச்சரித்து தடைசெய்துள்ளார்கள். அவற்றுள் பின்வருன ஹதீஸில் குறிப்பிடப்பட்டவையாகும்
(அழ்ழன்)'ஊகம், பழிசுமத்துதல் என்பது இதன் கருத்தாகும் அதாவது எவ்வித ஆதாரமுமின்றி ஊகத்தின் அடிப்படையில் உள்ளத்தில் எழும் பிறர் குறித்த தீய எண்ணம் (பழியுரைத்தல்). இதனை நபியவர்கள் பேச்சுகளில் மிகப்பெரும் பொய் என தெளிவுபடுத்துகிறார்கள்.
(அத்தஹஸ்ஸுஸ்) மனிதர்களின் குறைகளை நேரடியாக பார்த்தல்; அல்லது கேட்டல் ஊடாக தேடிச் செல்வதை குறிக்கும்.
(அத்தஜஸ்ஸுஸ்) மனிதர்களின் தெரியாத மறைவான விடயங்களை தேடிச்செல்லுதல்,
ஆய்வுசெய்தல். இவ்வார்த்தை அதிகம் தீமை சார்ந்த விடயங்களில் பிரயோகிக்கப்படும்.
(அல் ஹஸத்) : பிறருக்கு கிடைத்த அருள்களை விரும்பாதிருத்தல்,(வெறுத்தல்).
(அத்ததாபுர்) என்பது ஒருவறை புறக்கணித்து பிணங்கிக் கொள்வது இதனால் தனது சகோதர முஸ்லிமுக்கு ஸலாம் கூறாதிருப்பது அவரை சந்திக்காது இருத்தல்.
(அத்தபாகுழ்) என்பது வெறுத்தல் ஓதுக்குதல் என்ற கருத்தைக்குறிக்கும் அதாவது பிறருக்கு நோவினை செய்தல் முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொள்ளுதல்,வெறுப்போடு சந்தித்தல் என்பவை இதன் கருத்தாகும்.
இறுதியாக முஸ்லிம்களின் நிலைகளை சீர்செய்யும் முகமாகவும் ஒருவருக்கொருவர் சமாதானமாக இருப்பதற்காகவும் வேண்டி கருத்தாளமிக்க ஒரு வார்த்தையை குறிப்பிட்டார்கள். அதுதான் 'நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள் என்றவகையில் சகோதரர்களாக இருங்கள்';. சகோதரத்துவம் என்பது மனிதர்களுக்கு மத்தியில் உறவை, தொடர்பை பலப்படுத்தும் ஒரு இணைப்பாகும். அது அவர்களுக்கு மத்தியில் அன்பையும் நேசத்தையும் அதிகப்படுத்துகிறது.