عَنْ عَبْدِ اللَّهِ بنِ مَسْعُودٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«سِبَابُ المُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 48]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஒரு முஸ்லிமுக்கு ஏசுவது பாவமாகும். அவனோடு யுத்தம் செய்வது இறைநிராகரிப்பாகும்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 48]
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்கு ஏசுவதை நபியவர்கள் தடுப்பதோடு, அது 'புஸூக்' என்றும் கூறுகின்றார்கள். அதாவது, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்வதாகும். மேலும், ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுடன் போரிடுவது, நிராகரிப்பை ஏற்படுத்தும் செயலாகும். ஆனாலும், அது சிறிய நிராகரிப்பாகும்.