عن مَعقِلِ بن يَسار المُزَنِيّ رضي الله عنه قال: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
«مَا مِنْ عَبْدٍ يَسْتَرْعِيهِ اللهُ رَعِيَّةً، يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ، إِلَّا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 142]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக மஃகில் இப்னு யஸார் ரழியல்லாஹு அவர்கள் கூறினார்கள் :
அடியான் ஒருவனுக்கு மக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே மரணித்து விட்டால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்துவிடுகிறான்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 142]
மக்களுக்கு பொறுப்பாளராகவும், நிர்வாகியாகவும் அல்லாஹ் ஓவ்வொருவரையும் ஆக்கியுள்ளதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். குறிப்பிட்ட நிர்வாகமானது அமீர் (கலீபா) போன்ற பொது (நாட்டு) நிர்வாகமாகவோ அல்லது குடும்பத்தினூடான வீட்டு நிர்வாகம் போன்ற குறிப்பான நிர்வாகமாக இருந்தாலும் சரியே இவையனைத்தையும் இது உள்ளடக்குகிறது. ஆகவே தனது குடிமக்களின் உரிமைகளில் அலட்சியமாக நடந்து, அவர்களுக்கு மோசடி செய்து அவர்களுக்கு எந்த நலனையும் நாடாது, மார்க்கம் மற்றும் உலகியல் உரிமைகளை பால்படுத்தியவரே இவ்வாறான கடுமையான தண்டணைக்கு தகுதியானவராக மாறுகிறார்.