ஹதீஸ் அட்டவணை

இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'மார்க்கம் என்பது நலன் நாடுவதாகும்;
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'யா அல்லாஹ் !என் சமுதாயத்தின் விவகாரங்களில் ஒன்றை பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! மேலும் என் சமூகத்தின் விவகாரங்களில் ஒன்றை ஒருவர் பொறுப்பேற்று அவர்களுடன் நலினமாக நடந்து கொள்கிறாரோ அவருடன் நலினமாக நடந்து கொள்வாயாக !
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அடியான் ஒருவனுக்கு மக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே மரணித்து விட்டால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்துவிடுகிறான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஒரு நபரின்; (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்று விடுங்கள்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
, என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன், ஒரு அபீஸீனிய அடிமை உங்களுக்குப் பொறுப்பாளராக வந்தாலும், அவருக்கு செவிசாய்த்து கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு நீங்கள் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் கண்டு கொள்வீர்கள். எனவே, எனது ஸுன்னாவையும் நேர்வழிநடந்த கலீபாக்களின் ஸுன்னாவையும் உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உண்மையில், எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கும் சில விடயங்களும், ஆட்சியாளர்கள் செல்வங்களை தாங்களே அனுபவிக்கும் போக்கும் காணப்படும்' அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டனர். அவர் கூறினார்: 'உங்களுக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் உங்களுக்குரியதை அல்லாஹ்விடம் கேளுங்கள்.' என்றார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
இறைவா! என் சமுதாயத்தில் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அவருடன் நீ கடுமையாக நடப்பாயாக! என் சமுதாயத்தின் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொண்டால் அவருடன் நீ மென்மையாக நடப்பாயாக.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நீங்கள் செவிசாய்த்துக் கட்டுப்படுங்கள். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளவை, அவர்களுக்குக் கடமையாக இருக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்வை, உங்களுக்குக் கடமையாக இருக்கும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நாம் நபி (ஸல்) அவர்களுக்கு செவிசாய்த்து கட்டுப் படுவோம் என சத்தியப்பிரமானம் செய்தால் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் "உங்களுக்கு முடியுமானவற்றில்" எனக் கூறுவார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட 'நஜ்ரான்' நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களின் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது