عن أم سلمة هند بنت أبي أمية حذيفة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم أنه قال: «إِنَّه يُسْتَعمل عَلَيكُم أُمَرَاء فَتَعْرِفُون وَتُنكِرُون، فَمَن كَرِه فَقَد بَرِئ، ومَن أَنْكَرَ فَقَد سَلِمَ، ولَكِن مَنْ رَضِيَ وَتَابَعَ» قالوا: يا رسول الله، أَلاَ نُقَاتِلُهُم؟ قال: «لا، ما أَقَامُوا فِيكُم الصَّلاَة».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்)அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா (ரலி) கூறுகின்றார்கள் : "உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். "இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)" என்று கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]
ஆட்சித் தலைவர்களினால் சில பிரதிநிதிகள் எமக்கு நியமிக்கப்படுவார்கள், அவர்களிடம் மார்க்கத்திற்கு உடன்பட்ட சில நன்மைகளையும் காண்போம், முரண்பட்ட சில பாவங்களையும் காண்போம், அவர்களது அடக்குமுறையை அஞ்சி அதனைத் தடுக்க சக்தியற்று, உள்ளத்தால் வெறுத்தவர் பாவத்திலிருந்து தப்பிக் கொண்டவராவார், கையினாலோ, நாவினாலோ தடுக்க சக்தி பெற்று, தடுத்தவரும் தப்பிவிட்டார், இருப்பினும் அவர்களது செயலைப் பார்த்து திருப்தியடைந்து, துணை போனவர்கள் அவர்களைப் போன்றே அழிந்து போவார்கள் என நபியவர்கள் அறிவிக்கின்றார்கள். பின் தோழர்கள் அவர்களை எதிர்த்து நாம் போராடவா என நபியவர்களிடம் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் அவர்கள் தொழுகையை நிலைநாட்டும் வரை போர் தொடுக்க வேண்டாமெனத் தடுத்தார்கள்.