عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: «من خرج من الطاعة، وفارق الجماعة فمات، مات مِيتَةً جاهلية، ومن قاتل تحت راية عِمِّيَّة يغضب لِعَصَبَة، أو يدعو إلى عَصَبَة، أو ينصر عَصَبَة، فقتل، فَقِتْلَة جاهلية، ومن خرج على أمتي، يضرب برها وفاجرها، ولا يَتَحَاشَى من مؤمنها، ولا يفي لذي عهد عهده، فليس مني ولست منه»،
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன, கோத்திரத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும். யார் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

இந்நபிமொழியின் விளக்கம் : தமது எதிரிகளை விட்டும் காக்கும் ஒரு தலைவருக்குக் கீழ் கட்டுக்கோப்பான ஒழுங்கில், ஒற்றுமையாக, ஏகோபித்து வாழும் ஒரு முஸ்லிம் கூட்டமைப்பிலிருந்து ஒருவன் விலகி, அதன் ஆட்சித் தலைவருக்கு எதிராகப் புரட்சி செய்து, அதே நிலையில் மரணித்தால் தலைமைத்துவமில்லாத அராஜகத்தில் வாழ்ந்ததால் அறியாமைக்கால மரணமாகவே அவன் மரணிக்கின்றான். இன வாதம், குல வாதம் போன்ற இலக்குத் தெளிவில்லாத மௌட்டீகத்தின் கீழ் போராடி, இன, குல வாதத்திற்காகக் கோபப்பட்டு, அதன் பக்கம் அழைத்து, அதற்காக உதவி செய்பவனின் நிலையும் இதுதான். அவன் தனது மனோஇச்சைக்காகவும், குலபேதத்திற்காகவும் போராடுகின்றான் என்பதே இதன் அர்த்தமாகும். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகப் புரட்சி செய்து, நல்லவர்கள், தீயவர்கள், விசுவாசி, முஸ்லிம் பிரதேசங்களில் ஒப்பந்த அடிப்படையில் வாழும் மாற்று மதத்தவர், வரிப்பணம் செலுத்தி வாழும் மாற்று மதத்தவர்கள் என்று பாராமல் அனைவரையும் தாக்குவதுடன், தான் செய்யும் காரியத்தைப் பொருட்படுத்தாமலும், அதன் பின்விளைவுகளை அஞ்சாமலும் இருப்பவனை விட்டும் நபியவர்கள் விலகியுள்ளார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ்விற்கு மாறு செய்யாத விடயங்களில் ஆட்சித் தலைமைகளுக்குக் கட்டுப்படுவது அவசியமாகும்.
  2. ஆட்சித் தலைவர் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக கிளர்ச்சி செய்து, முஸ்லிம் சமூகத்தின் கூட்டமப்பை விட்டும் விலகியிருப்பது பற்றி கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது, இதே நிலையில் மரணித்தால் அறியாமைக் கால மக்களின் வழியிலேயே மரணித்தராகவே கருதுப்படும்.
  3. ஒருவர் கூட்டமைப்பை விட்டும் விலகி, அவர்களுக்கு எதிராக புரட்சி செய்யாமலும், போராடாமலும் இருந்தால் அவரை கூட்டமைப்பில் இணைத்து, தலைமைக்குக் கட்டுப்பட வைப்பதற்காகப் போரிடத் தேவையில்லை. அவரை அவர் வழியிலேயே விட்டு விட வேண்டும்.
  4. தலைமைக்குக் கட்டுப்பட்டு, கூட்டமைப்புடன் சேர்ந்திருப்பதில் தான் பல நலவுகள், பாதுகாப்பு, நிம்மதி, சீரான நிலமை ஆகியன உள்ளன.
மேலதிக விபரங்களுக்கு