عن عرفجة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "من أتاكم وأمرُكُم جَمِيْعٌ على رجل واحد، يُريد أن يَشُقَّ عَصَاكُم، أو يُفَرِّقَ جَمَاَعَتَكُم، فاقتُلُوهُ".
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அர்ஃபஜா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "ஒரு மனிதரின் (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்றுவிடுங்கள்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

முஸ்லிம்கள் ஒரே தலைவருக்குக் கீழ் ஒன்றுபட்ட பின் அவர்களது ஒற்றுமையைக் குலைத்து, கிளர்ச்சி செய்வோருக்கு எதிராக போராடுவதே இந்நபிமொழியின் சாரம்சமாகும். முஸ்லிம்கள் ஒரே தலைவரின் கீழ் ஒன்றுபட்ட பின் வேறு ஒருவன் இத்தலைவரை நீக்க வந்தால் அவனது கெடுதியைத் தடுக்கவும், முஸ்லிம்களின் உயிரைப் பாதுகாக்கவும் அவனைக் கொன்றாவது அதற்கொரு முடிவு கட்டுவது அவசியமாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. முஸ்லிம் தலைவருக்குக் கட்டுப்படுவது கடமை என்பதுடன், அவருக்கெதிராக போரிடுவது ஹராமாகும்.
  2. முஸ்லிம்கள் ஒன்றுபட்டிருக்கும் ஒரு தலைவருக்கு எதிராக யாராவது புரட்சி செய்தால் அவன் குடும்பம், அந்தஸ்த்தில் எந்த உயரத்தில் இருந்தாலும் அவனைக் கொல்வது அவசியமாகும்.
  3. புரட்சியாளன் தனிநபராகவோ, கூட்டமாகவோ இருந்தாலும் அவர்களைக் கொள்ள வேண்டும் என்பதே இந்நபிமொழியின் வெளிப்படையாகும். இருப்பினும் கூட்டமாக இருந்து, அவர்களுக்கு பலமும் இருந்து, ஏதாவது கோரிக்கைகளை முன்வைத்து புரட்சி செய்தால் அவர்கள் கிளர்ச்சியாளர்களாகும். கோரிக்கைகள் ஏதுமின்றி, ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் புரட்சி செய்தால் அவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களாகப் பார்க்கப்பட்டு அவர்களுக்குரிய சட்டமே இவர்களுக்கும் அமுல்படுத்தப்படும்.
  4. பிரிவினை, கருத்து வேறுபாடுகளைத் துறந்து, ஒற்றுமையாக இருக்கத் தூண்டுதல்.
மேலதிக விபரங்களுக்கு