ஹதீஸ் அட்டவணை

இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்திலிருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிடமாட்டோம் என்றும் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
"இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக!".
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதில்லை.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர்மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன, கோத்திரத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஒரு மனிதரின் (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்றுவிடுங்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
உங்களில் எவரேனும் தீமை ஒன்றைக் கண்டால் அதனை தன் கரத்தால் தடுக்கட்டும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழி
இறைவா! என் சமுதாயத்தில் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அவருடன் நீ கடுமையாக நடப்பாயாக! என் சமுதாயத்தின் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொண்டால் அவருடன் நீ மென்மையாக நடப்பாயாக.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடவுங்கள்.ஏனெனில் அவர்களின் மீது சுமத்தப்பட்டது எதுவோ அதனை அவர்கள் செய்வது அவர்களின் கடமை. உங்கள் மீது சுமத்தப்பட்டது எதுவோ அதனை நீங்கள் செய்வது உங்களின் கடமை,
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
"நிச்சயமாக மார்க்கம் இலகுவானது.மார்க்கம் அழிந்த போகாது.ஆனால் அது மிகைப்படுத்தப் பட்டாலேயன்றி.எனவே அதனை நடு நிலையாகவும்.மிகைப் படுத்தாமலும் செய்து வாருங்கள்.மேலும் மகிழ்ச்சியாக இருங்கள்.இன்னும் நல்லமல் மூலம் காலையிலும்,மாலையிலும்,இரவின் ஒரு பகுதியலும் உதவி தேடுங்கள்"என்றும்,"கருமத்தை நடு நிலையாகச் செய்யுங்கள்.மிகைப் படுத்தாதீர்கள்.காலையிலும்,மாலையிலும்,இன்னும் இரவின் ஒரு பகுதியிலும் அதனை நடு நிலையாகச் செய்யுங்கள்"என்றும் ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நாம் நபி (ஸல்) அவர்களுக்கு செவிசாய்த்து கட்டுப் படுவோம் என சத்தியப்பிரமானம் செய்தால் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் "உங்களுக்கு முடியுமானவற்றில்" எனக் கூறுவார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட 'நஜ்ரான்' நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களின் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
உங்களில் எவரேனும் தொழும் வேளையில் அவருக்கு சிறு தூக்கம் ஏற்பட்டால் அவர் தன்னை விட்டும் தூக்கம் நீங்கும் வரையில் நித்திரை செய்து கொள்ளவும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகள் இருக்கின்றன.மேலும் நீங்கள் உங்கள் ஆத்மாவுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகளும்,உங்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய சில உரிமைகளும் இருக்கின்றன.எனவே அனைவரின் உரிமைகளையும் அவரவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
பேச முடியாத இந்தக் கால்நடைகள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.எனவே அது நல்ல நிலையில் இருக்கும் போது அதில் சவாரி செய்யுங்கள். மேலும் அது நல்ல நிலையில் இருக்கும் போது அதனைப் புசியுங்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு