+ -

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ يَعْدِلُ بَيْنَ الِاثْنَيْنِ صَدَقَةٌ، وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ فَيَحْمِلُ عَلَيْهَا أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَيُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2989]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் மனிதர்கள் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புகளுக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும், அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். இன்சொல்லும் ஒரு தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமாகும்.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 2989]

விளக்கம்

ஒவ்வொரு முஸ்லிமும் உடலிலுள்ள மூட்டுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தனக்கு கிடைத்துள்ள ஆரோக்கியத்திற்கு நன்றி செலுத்தும் முகமாகவும், தனது மூட்டுக்களை மடிப்பதற்கும் நீட்டுவதற்குமான இயலுமையை தந்தமைக்கும் தினமும் அல்லாஹ்வுக்கு தர்மம் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். குறித்த தர்மமானது செல்வத்தால் மாத்திரமின்றி அனைத்து நற்காரியங்களின் மூலமும் நிறைவேற்ற முடியும் என்பதையும் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டுகிறார்கள் அவற்றின் சில பின்வருமாறு : இரு பகைவருக்கு மத்தியில் நீ சமாதானத்தை ஏற்படுத்தி நீதிவழங்குவதும் தர்மமாகும். ஒருவர் தனது வாகனத்தில் ஏறி அமர்வதற்கு உதவுவதும் அல்லது அவரின் பயணச்சுமைகளை ஏற்றிவிடுவதும் உமக்கு தர்மமாகும். திக்ர்,துஆ,(பிரார்த்தனை) ஸலாம் கூறுதல் போன்ற அழகிய வார்த்தையும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமாகும்

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மனித உடலில் காணப்படும் எலும்புகளின் கட்டமைப்பும் அதன் சீரான இயக்கமும் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியிருக்கும் மிகப்பெரும் அருளாகும். ஆகவே இந்த அருளுக்கு முழுமையாக நன்றி செலுத்த அவை ஒவ்வொன்றும் சார்பாக தர்மம் செய்வது அவசியத் தேவையாகும்.
  2. குறித்த அருளானது நிலைபெற தினமும் நன்றி செலுத்த ஆர்வம் ஊட்டப்பட்டுள்ளமை.
  3. தினமும் உபரியான தொழுகைகள் மற்றும் தர்மங்களை தொடர்ச்சியாக செய்ய ஆர்வமூட்டப்பட்டுள்ளமை.
  4. மனிதர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்துவைப்பதன் சிறப்பு சுட்டிக் காட்டப்பட்டுள்மை.
  5. ஒருவர் தனது சகோதருக்கு உதவி செய்யுமாறு தூண்டப்பட்டிருத்தல். ஏனெனில் ஒருவர் தனது சகோதரருக்கு உதவி செய்வது தர்மமாகும்.
  6. ஜமாஅத் தொழுகைகளுக்கு நடந்து சென்று கலந்து கொள்ளவும் மஸ்ஜித்களை வளப்படுத்தவும் தூண்டப்பட்டிருத்தல்.
  7. முஸ்லிம்கள் -பாதை சாரிகள் - நடந்து செல்லும் பாதையில் அவர்களுக்கு நோவினை தரக்கூடிய அல்லது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலம் பாதைகளை சீராக வைத்துக்கொள்ளுதல் அவசியமாகும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوزبكية الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு