+ -

عَنِ ‌ابْنِ عُمَرَ رضي الله عنهما:
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ يَوْمَ فَتْحِ مَكَّةَ، فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ قَدْ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَتَعَاظُمَهَا بِآبَائِهَا، فَالنَّاسُ رَجُلَانِ: بَرٌّ تَقِيٌّ كَرِيمٌ عَلَى اللهِ، وَفَاجِرٌ شَقِيٌّ هَيِّنٌ عَلَى اللهِ، وَالنَّاسُ بَنُو آدَمَ، وَخَلَقَ اللهُ آدَمَ مِنْ تُرَابٍ، قَالَ اللهُ: {يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللهِ أَتْقَاكُمْ إِنَّ اللهَ عَلِيمٌ خَبِيرٌ} [الحجرات: 13]».

[صحيح] - [رواه الترمذي وابن حبان] - [سنن الترمذي: 3270]
المزيــد ...

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் உரை நிகழ்த்தினார்கள். அதில் அவர்கள் கூறினார்: ''மக்களே, நிச்சயமாக அல்லாஹ் உங்களிடமிருந்து ஜாஹிலிய்யாவின் ஆணவத்தையும், முன்னோர்களைப் பற்றிய பெருமைகொள்வதையும் நீக்கிவிட்டான். ஆகவே தற்போது இரண்டு வகையான மக்கள் உள்ளனர்: அல்லாஹ்வின் பார்வையில் நேர்மையான, பக்தியுள்ள மற்றும் கண்ணியமான நபர். அல்லாஹ்வின் பார்வையில் ஒரு பொல்லாத, பரிதாபத்திற்குரிய, அற்பமான மனிதர். மக்கள் ஆதமின் பிள்ளைகளாவர், அல்லாஹ் ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே, நாங்கள் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்து நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிகவும் பயபக்கதியுடையவரே அல்லாஹ்வின் முன் உங்களில் மிகவும் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், நுட்பமானவன். (ஹுஜுராத் : 13).

[ஸஹீஹானது-சரியானது] - - [سنن الترمذي - 3270]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட தினத்தில் உரைநிகழ்த்தினார்கள், அதில் அவர்கள் : மக்களே நிச்சயமாக அல்லாஹ் ஜாஹிலிய்யக்கால ஆணவத்தையும், வீராப்புக்கொள்வதையும், தங்களின் மூதாதையர்களின் பெருமை பேசுவதையும் உங்களை விட்டும் அகற்றிவிட்டான். ஆகையால் மக்கள் இரு வகையினராவர்.
முதலாமவர் : அல்லாஹ்வுக்கு பணிந்து கட்டுப்பட்டு நடக்கும் நேர்மையான, பக்தியுள்ள முஃமின், இவர் மக்களிடத்தில் உயர்பரம்பரை மற்றும் உயர் குலத்தை சார்ந்தவாராக இல்லாது விட்டாலும் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியத்திற்குரியவராவார்.
இரண்டாமவர் : ஒழுக்கக்கேடான அல்லாஹ்வை நிராகரித்த துஷ்டன், இவன் உயர் குலமும் புகழும் அதிகாரமும் மிக்கவனாக திகழ்ந்தாலும் அல்லாஹ்விடத்தில் அட்பமான மிகப்பரிதாபமானவனாகவே இருப்பான். இவனுக்கு எந்த மதிப்பும் கிடையாது.
மனிதர்கள் அனைவரும் ஆதமின் சந்ததியாவார்கள். அல்லாஹ் ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். ஆகவே எவரின் அசல் -அடிப்படை- மண்ணாக இருக்கிறதோ அவர் பெருமையடித்தல் தற்பெருமைக்கொள்ளல் போன்ற விடயங்களுக்கு அருகதையற்றவர். இதனை பின்வரும் அல்லாஹ்வின் கூற்று தெளிவுபடுத்துகிறது : 'மனிதர்களே, நாங்கள் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்து நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிகவும் பயபக்கதியுடையவரே அல்லாஹ்வின் முன் உங்களில் மிகவும் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், நுட்பமானவன்'. (ஹுஜுராத் : 13).

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி துருக்கிய மொழி போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Итолёвӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பரம்பரை, மூதாதையர் மரபு ஆகியவற்றினால் தற்பெருமை கொள்வது தடுக்கப்பட்டிருத்தல்.
மேலதிக விபரங்களுக்கு