+ -

عَنْ ‌الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ قَالَ:
لَمَّا نَزَلَتْ: {ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ} [التكاثر: 8]، قَالَ الزُّبَيْرُ: يَا رَسُولَ اللهِ، وَأَيُّ النَّعِيمِ نُسْأَلُ عَنْهُ، وَإِنَّمَا هُمَا الْأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ؟ قَالَ: «أَمَا إِنَّهُ سَيَكُونُ».

[حسن] - [رواه الترمذي وابن ماجه] - [سنن الترمذي: 3356]
المزيــد ...

அஸ்ஸுபைர் இப்னுல் அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் :
(பின்னர் அந்நாளில் அருட்கொடைகள் பற்றி நிச்சயமாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்) என்ற வசனம் இறங்கிய போது (அத்தகாஸுர் : 8) அஸ்ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எந்த அருட்கொடைபற்றி மறுமையில் விசாரிக்கப்டும்! 'அஸ்வதான்' எனும் ஈத்தம் பழமும் நீருமா? என்று வினவ அதற்கு :அறிந்து கொள்ளுங்கள்! அந்த அருட்கொடை பற்றியும்; அந்த விசாரணையில் இருக்கும் என்று பதிலளித்தார்கள்.

[ஹஸனானது-சிறந்தது] - - [سنن الترمذي - 3356]

விளக்கம்

பின்வரும் வசனமான, (ஸும்ம லதுஸ்அலுன்ன யவ்மஇதின் அனின் நஈம்) அதாவது உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தியது குறித்து உங்களிடம் மறுமையில் விசாரிக்கப்படவிருக்கிறீர்கள் என்ற வசனம் இறங்கியபோது அஸ்ஸுபைர் இப்னுல் அவ்வாம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எந்ந அருட்கொடைபற்றி நாம் விசாரிக்கப்படப் போகிறோம்? அதாவது ஈத்தம் பழம் மற்றும் நீர் ஆகிய விசாரிக்கப்படுவதற்கு பொருத்தமில்லாத இரு அருள்கள் பற்றியா! என வினவினார்கள். அதற்கு :
நீங்கள் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் அருள்களுடன் சேர்த்து அந்த மாபெரும் இரு அருள்கள் குறித்தும் விசாரிக்கப்பட உள்ளீர்கள் என்று பதிலளித்தார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி துருக்கிய மொழி போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துமாறு வலியுறுத்துதல்.
  2. மறுமை நாளில் ஒரு அடியான் அனுபவித்த அருள்கள் அது குறைவானதாகவோ அல்லது அதிகமானதாவோ இருப்பினும் அவைகள் பற்றி விசாரிக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு