عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«مَنْ أَنْظَرَ مُعْسِرًا، أَوْ وَضَعَ لَهُ، أَظَلَّهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ تَحْتَ ظِلِّ عَرْشِهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ».
[صحيح] - [رواه الترمذي وأحمد] - [سنن الترمذي: 1306]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"கஷ்டத்தில் உள்ள ஒருவனுக்கு தவணை கொடுப்பவனுக்கு அல்லது அவனுக்கு விட்டுக் கொடுப்பவனுக்கு, அல்லாஹ்வின் அர்ஷின் நிழலன்றி வேறு நிழல் இல்லாத மறுமை நாளிலே, தன் அர்ஷின் நிழலின் கீழ் அல்லாஹ் நிழல் அளிப்பான்".
[ஸஹீஹானது-சரியானது] - - [سنن الترمذي - 1306]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கடனாளிக்கு கால அவகாசம் அளிப்பவர் அல்லது கடனைத் தள்ளுபடி செய்பவர் குறித்தும் இவ்வாறு நடந்து கொள்பவருக்குக் கிடைக்கும் சன்மானம் பற்றியும் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த சன்மானம் என்னவெனில் மறுமை நாளில் அடியார்களின் தலைகளுக்கு அருகில் சூரியன் நெருக்கமாகக் கொண்டுவரப்பட்டு, கடும் வெப்பத்தில் இருக்கும் அந்த தருனத்தில் இவ்வாறு சக மனிதர்களுடன் நடந்து கொண்ட அந்த அடியானுக்கு அல்லாஹ் தனது அர்ஷின் நிழலை அளித்து கடும் வெப்பத்திலிந்து பாதுகாக்கிறான் அந்நாளில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலை எவரும் கண்டு கொள்ளமாட்டார்கள்.