عن أنس رضي الله عنه مرفوعاً: «من خَرج في طلب العلم فهو في سَبِيلِ الله حتى يرجع».
[حسن] - [رواه الترمذي]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) கூறுகின்றார்கள் :"கல்வியைத் தேடி வெளியில் சென்றவர் திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையிலேயே இருக்கின்றார்".
[ஹஸனானது-சிறந்தது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]
ஹதீஸ் விளக்கம் : தனது வீட்டிலிருந்தோ, நாட்டிலிருந்தோ மார்க்கக் கல்வியைத் தேடி வெளியேறிச் சென்றவர் வீடு திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய வெளியேறிச் சென்றவரைப் போலாவார். ஏனெனில் இவர் மார்க்கத்தை உயிர்ப்பிப்பதிலும், ஷைத்தானை இழிவாக்குவதிலும், தன்னை வருத்திக் கொள்வதிலும் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்.