عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ العَاصِ رضي الله عنهما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللهَ سَيُخَلِّصُ رَجُلًا مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ، فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًّا، كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ الْبَصَرِ، ثُمَّ يَقُولُ: أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا؟ أَظَلَمَكَ كَتَبَتِي الْحَافِظُونَ؟ فَيَقُولُ: لَا يَا رَبِّ، فَيَقُولُ: أَفَلَكَ عُذْرٌ؟ فَيَقُولُ: لَا يَا رَبِّ، فَيَقُولُ: بَلَى إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً، فَإِنَّهُ لَا ظُلْمَ عَلَيْكَ الْيَوْمَ، فَتُخْرَجُ بِطَاقَةٌ فِيهَا: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولُ: احْضُرْ وَزْنَكَ، فَيَقُولُ: يَا رَبِّ مَا هَذِهِ الْبِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلَّاتِ؟ فَقَالَ: إِنَّكَ لَا تُظْلَمُ، قَالَ: فَتُوضَعُ السِّجِلَّاتُ فِي كِفَّةٍ، وَالْبِطَاقَةُ فِي كِفَّةٍ، فَطَاشَتِ السِّجِلَّاتُ، وَثَقُلَتِ الْبِطَاقَةُ، فَلَا يَثْقُلُ مَعَ اسْمِ اللهِ شَيْءٌ».
[صحيح] - [رواه الترمذي وابن ماجه] - [سنن الترمذي: 2639]
المزيــد ...
நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா, அவர்கள் கூறுகிறார்கள்
மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் ஒரு மனிதனை விடுதலை செய்வான். அவனது குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட தொண்ணூற்றி ஒன்பது ஏடுகள் அவன் முன் விரிக்கப்படும். ஒவ்வொரு ஏடும் பார்வை எட்டும் தொலைவில் இருக்கும். இவற்றில் எதையேனும் மறுக்கிறாயா? நம்பகமான எனது எழுத்தாளர்கள் உனக்கு அநியாயம் செய்து விட்டார்களா? என்று இறைவன் கேட்பான். இல்லை இறைவா! என்று அவன் கூறுவான். அக்குற்றங்களுக்கு உன்னிடம் எதாவது நியாயமான காரணம் ஏதும் உள்ளதா? என்று இறைவன் கேட்பான்.இல்லை இறைவா! என்று அவன் கூறுவான். அப்போது இறைவன் 'நிச்சயமாக உனக்கு என்னிடத்தில் நல்லதே கிடைக்கும், இன்று உமக்கு எந்த அநீதியும் கிடையாது, என்று கூறுவான். பிறகு சிறிய துண்டுச் சீட்டு ஒன்று எடுத்துக்காட்டப்படும்; அதில் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸுலு{ஹு என்று எழுதப்பட்டிருக்கும். 'உனது செயலின் எடையைப்பார்' என்று இறைவன் கூறுவான். அதற்கு அம்மனிதன் இறைவா! அந்தத் துண்டுச்சீட்டு அந்த ஏடுகளுக்கு எப்படி நிகராகும்? என்று கேட்பான். (இன்றைய தினம்) உனக்கு எந்த அநியாயமும் செய்யப்படமாட்டாது என்று இறைவன் கூறுவான். அந்த ஏடுகள் அனைத்தும் ஒரு தட்டிலும் அந்தத் துண்டுச் சீட்டு இன்னொரு தட்டிலும் வைக்கப்படும். ஏடுகள் உயர்ந்து துண்டுச்சீட்டு வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கும். அல்லாஹ்வின் திருநாமத்திற்கு நிகராக எதுவும் கனதியாக இருக்காது என்று நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - - [سنن الترمذي - 2639]
மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் தனது சமூகத்திலிருந்து ஒரு மனிதனை விசாரணைக்காக அழைத்து அவனிடம் 99 பதிவேடுகளை எடுத்துக்காட்டுவான், என நபி ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். பதிவேடு என்பது அந்த மனிதன் உலகில் செய்த தீய செயல்களின் ஏடுகளைக் குறிக்கும். ஓவ்வொரு பதிவேடும் பார்வை எட்டும் அளவுக்கு நீண்டதாக காணப்படும்;. பின்னர் அல்லாஹ் அந்த மனிதனைப்பார்த்து இந்தப் பதிவேடுகளில் எழுதப்பட்டவைகளில் ஒன்றையேனும் நீ மறுக்கிறாயா? எனக் கேட்பான். எழுத்தாளர்களான எனது வானவர்கள் உமக்கு அநியாயம் இழைத்துள்ளனரா? அதற்கு அந்த மனிதன் : எனது இரட்சகனே அவ்வாறில்லை என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் அந்த மனிதனிடம் உலகில் நீ செய்து முற்படுத்திய தீய செயல்களுக்கு மறதி அல்லது தவறு அல்லது அறியாமை போன்ற ஏதும் நியாயமான காரணங்கள் உண்டா? என்று கேட்பான். அதற்கு அந்த மனிதன் எனது இரட்சகனே அதற்கான எந்த நியாயமும் என்னிடத்தில் கிடையாது என்று கூறுவான். அப்போது அல்லாஹ் அவனைப்பார்த்து உண்மைதான்; உமக்கு எம்மிடம் நன்மை உண்டு எனவும் இன்றைய தினம் உமக்கு எந்த அநியாயமும் நிகழாது என்றும் கூறுவான். பிறகு சிறிய துண்டுச் சீட்டு (பதிவட்டை) ஒன்று எடுத்துக்காட்டப்படும்; அதில்" அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸுலுஹு" (உண்மையாக வணங்கப்படத்தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாறும் இல்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மத் அவனின் அடியாரும் அவனின் தூதருமாவார் எனவும் சாட்சி கூறுகிறேன்) என்று எழுதப்பட்டிருக்கும். தொடர்ந்தும் அல்லாஹ் அந்த மனிதனைப்பார்த்து ' உனது செயலின் எடையை காட்டும் ' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதன் எனது இரட்சகனே! இந்தப்பதிவேடுகளின் நிறைக்கு இந்த பதிவட்டையின் நிறை நிகராகுமா? என மனிதன் ஆச்சரியமடைந்தவனாக கேட்பான். அதற்கு அல்லாஹ் ' உமக்கு எந்த அநியாயமும் நிகழ மாட்டாது' எனக் கூறுவான். பதிவேடுகள் ஒரு தட்டிலும் பதிவட்டை இன்னொரு தட்டிலும் வைக்கப்படும், அப்போது பதிவேடுகளின் தட்டு குறைந்து பதிவட்டை இருந்த தட்டு கனதியாகி அதன் எடை அதிகரித்து விடும் அப்போது அல்லாஹ் அந்த மனிதனின் பாவத்தை மன்னித்து விடுவான்.