عَنْ أَبِي ذَرٍّ رضي الله عنه قَالَ:
قُلْتُ: يَا رَسُولَ اللهِ مَا آنِيَةُ الْحَوْضِ؟ قَالَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَآنِيَتُهُ أَكْثَرُ مِنْ عَدَدِ نُجُومِ السَّمَاءِ وَكَوَاكِبِهَا، أَلَا فِي اللَّيْلَةِ الْمُظْلِمَةِ الْمُصْحِيَةِ، آنِيَةُ الْجَنَّةِ مَنْ شَرِبَ مِنْهَا لَمْ يَظْمَأْ آخِرَ مَا عَلَيْهِ، يَشْخَبُ فِيهِ مِيزَابَانِ مِنَ الْجَنَّةِ، مَنْ شَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ، عَرْضُهُ مِثْلُ طُولِهِ، مَا بَيْنَ عَمَّانَ إِلَى أَيْلَةَ، مَاؤُهُ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ، وَأَحْلَى مِنَ الْعَسَلِ».

[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

அபூதர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதரே! ஹவ்ளுல் கவ்ஸரின் பாத்திரங்கள் எத்தனை? என நபியவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எவன் கைவசம் முஹம்மதின் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, அதன் பாத்திரங்கள் இருள் நிறைந்த இரவில் வானத்தின் சிறிய, பெரிய நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கின்றன. சுவர்க்கத்தின் பாத்திரங்களில் எவர் தண்ணீர் அருந்துகிறாரோ அவருக்கு இறுதி; வரை தாகமெடுக்காது. சுவர்க்கத்திலிருந்து இரண்டுஆறுகள் ஊற்றெடுக்கின்றன. அதில் நீர் அருந்தியருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது அதன் அகலமோ சிரியா (ஷாம்) தேசத்திலுள்ள அம்மான், ஈலாஆகிய ஊர்களுக்கிடையே உள்ள தூரத்திற்குச் சமமாக இருக்கும். அதன் தண்ணீரோ பாலைவிட அதிக வெண்மையாய் இருக்கும். அதன் சுவையோ தேனைவிட மிக இனிமையாக இருக்கும் என்று கூறினார்கள்.'

ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

தனது நீர்தடாகத்தின் பாத்திரங்களின் எண்ணிக்கை வானத்தில் உள்ள உடுக்கள் மற்றும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சத்தியமிட்டுக் குறிப்பிட்டார்கள். அவைகள் சந்திரவெளிச்சமில்லாத நிலையில் வானத்தில் அவைகள் தோன்றும் சந்திர வெளிச்சம் நிறைந்த இரவுகளில்; அதன் ஒளியின் காரணமாக அதனை பார்க்க முடியாது,அதே போல் முகில்கள் நிறைந்த நிலையிலும் இதனைக் காணமுடியாது காரணம் முகில்கள் நட்சத்திரங்கள் தெரிவதை தடுத்துவிடுகிறது. சுவர்கத்தின் பாத்திரத்தினால் நீர் அருந்துவோர் ஒரு போதும் தாகத்தை உணரமாட்டார்கள். அதுவே அவருக்கு ஏற்பட்ட இறுதி தாகமாக இருக்கும். அந்த தடாகமானது சுவர்கத்தின் சுனையிலிருந்து வளிந்தோடும் இரு அருவிகளாகும்.அதன் அகலமும் நீலமும் சமமானவை. தடாகமானது சதுர வடிவமானது.அதன் பரப்பளவானது ஷாம் தேசத்தில் உள்ள அம்மானுக்கும் ஷாம் தேசத்தின் புறத்தே அமைந்திருக்கும் பிரபல்யமான நகரான அய்லா வரையிலாகும். தடாகத்தின் நீPர் பாலை விட வெண்மையாகவும், தேனை விட மிக சுவையானதாகவும் இருக்கும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஹவ்ல் எனும் நீர்த்தடாகம் குறித்தும் அதில் காணப்படும் பல வகையான இன்பங்கள் குறித்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை.
  2. நீர்தடாகத்தின் பிரமாண்டம் அதன் அகல நீலங்கள் அதில் வைக்கப்பட்டுள்ள அதிகமான பாத்திரங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளமை.
மேலதிக விபரங்களுக்கு