عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضي الله عنهما قَالَ: قالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ، مَاؤُهُ أَبْيَضُ مِنَ اللَّبَنِ، وَرِيحُهُ أَطْيَبُ مِنَ المِسْكِ، وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ، مَنْ شَرِبَ مِنْهَا فَلاَ يَظْمَأُ أَبَدًا».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6579]
المزيــد ...
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அறிவித்துள்ளார்கள்:
('அல்கவ்ஸர்'எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது.அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது.அதன் கூசாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 6579]
மறுமை நாளில் நபியவர்களுக்கென ஒரு தடாகம் உள்ளதாகவும் அதன் நீளமும் அகலமும் ஒரு மாதகால பிரயாணம் செய்யும் தூரத்துக்கு நிகரானது என இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் அதன் நீரானது பாலைவிட வெண்மையானது. அதன் சுகந்தமோ கஸ்தூரியை விட அதிகமானது. அதில் வைக்கப்ப்ட்டுள்ள கூசாக்களின் எண்ணிக்கை வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் அளவுக்கு மிக அதிகமானவை . இந்த தடகத்தில் அந்த கூசாக்களின் மூலம் நீர் அருந்தியோருக்கு தாகமென்பது ஒரு போதும் ஏற்படாது.